முதன் முதலில் மகளிருக்கு மகப்பேறு விடுப்பு தந்தவர்

முதன் முதலில் மகளிருக்கு மகப்பேறு விடுப்பு தந்தவர்
-------------------------------------------
மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் பெண்
அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு 6 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது .

இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது .

அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து பதவி விலகி விடவேண்டும் .

அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர்
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து மீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம் .மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு முன்னுரிமை உண்டு .

மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் .அவர்களுக்கு மீண்டும் வேலைகிடைக்காது .

1942ல் வைசிராய் நிர்வாக கவுன்சிலில் ஒருவர் தொழிலாளர் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மனிதாபிமானத்தோடு இப்பிரச்சினையை அணுகினார் .
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை அறிவித்தார் . பெண்மையின் அறிவையும் நலத்தையும் ஒருசேர பாதுகாத்தார் .சுதந்திர இந்தியாவிலும் அது இன்றுவரை தொடர்கிறது .

அந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் .👑

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth