இது நம்ம சீர்காழி சிறப்பு
இது நம்ம சீர்காழி சிறப்பு
அங்கிட்டு போனா சிதம்பரம்
இங்கிட்டு வந்தா மாயவரம்
ஊரு ஒண்ணு
பேரு பண்ணிரெண்டு..
தியேட்டர் மூணு
ஒய்யாரமா பால்கனில பாக்க OSM
சத்தத்தோட பளிச்னு பாக்க பாலாஜி
சிக்கனமா செலவு பாக்கறவங்களுக்கு சிவக்குமார்
மாடி ஏறி
பால்கனில போய் சாமி இருக்கற ஒரே ஊரு எங்க ஊரு..
அய்யர் கடையும் பேமஸ்
கட்ட முதலியார் கடையும் பேமஸ்..
நல்லா சாப்பிட புத்தூர் ஜெயராம் ஹோட்டல்
நாலு வீதியலயும் நைட்டு ஓட்டலு...
எல்லா ஒட்டல்லையும் கூட்டம் அள்ளுது..
ஆபத்து காத்த பிள்ளையார் கோவில்..
வெள்ளிக்கிழமைல பூஜையில அவர காப்பாத்த முடியாது..
நல்லா படிக்க SMHS
ஜாலியா படிக்க LMC
வெயிட்டா படிக்க விவேகானந்தா
பெஸ்ட்டா படிக்க BEST
நாகை மாவட்டத்தோட பெரிய பஸ் ஸ்டான்ட்
எங்க ஊர் பஸ் ஸடான்ட்
பூம்புகார் பஸ்ல பாக்கலாம் தினம் ஒரு காதல் கதை.
இங்க ஜெயிச்சா ஆளுங்கட்சி அங்க கன்பார்ம்..
சாயங்கலாம் ஆனா அழகான பள்ளிகூடத்து பசங்க வர கடைத்தெரு..
அழகான மிஸ்கள் வரும் தென்பாதி..
கொள்ளிடத்தை விட கூட்டமான கொள்ளிடம் முக்கூட்டு..
பரபரப்பான பழையபஸ்டான்ட்..
கூட்டம் நடத்தலைனாலும் கூட்டமாவே இருக்க ஸ்டேட் பாங்க் வாசல்..
மினி பஸ்களோட ட்ராபிக் ஜாம் அலும்புகள்.
டவுன் பஸ்களோட ஹாரன் சவுண்ட்கள்.
அமைதியா இருக்க பெரியகோயில்.
ஆரோக்கியமா நடக்க ரயில்வே ஸ்டேசன்.
அவசர அமெளன்ட்க்கு விஜய்சுபம்
அருமையான நகைகளுக்கு நாராயணன் ஜீவல்லரி
மளிகைக்கு சிட்டி மளிகை..
சிட்டில உள்ள மளிகைக்கடை போல சுப்ரீம் சூப்பர் மார்க்கெட்
பிரபலமானவங்கள சந்திக்க பிரில்லியண்ட் காபி
மருத்து பிரச்சினை இல்லாம இயற்கையோடு வாழ நலம் அங்காடி
நம்ம துணிக்கடைனு உரிமையோட போக நம்நாடு துணிக்கடை.
அகத்தியர் பாத்திரத்தில் வாழ்ந்த உலகின் உயர்ந்த குரலுக்கு சொந்தமான குள்ளமனிதன்
தமிழ் இசையின் கணீர் குரல் சொந்தகாரர்
பக்தி பாடல் பாடினால் இறைவனுக்கே சொந்தகாரர்
எங்க ஊரோட சொத்துக்காரர்.
சீர்காழி கோவிந்தராஜன்
பாசத்திற்காக உயிரை கொடுக்கும் நண்பர்கள் கூட்டம்👬👬
இன்னும் சொல்ல ஏராளம் நம்ம சீர்காழி பசங்க மனசு தாராளம்.
Comments