ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருக்கும். ஒரு கற்பனை…

ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருக்கும். ஒரு கற்பனை…
அமைச்சர் : மன்னா...மன்னா...
மன்னர் : என்ன அமைச்சரே?
அமைச்சர் :

மன்னா, நம்முடன் போர் தொடுக்க பக்கத்து நாட்டு மன்னர் படையடுத்து வருகிறார்.
மன்னர் :
காலையில் தான் "Feeling happy with andhapuram'னு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.அது அவனுக்கு பொறுக்கவில்லயா?
அமைச்சர் : அது இல்லை மன்னா.
மன்னர் :
பிறகு எதற்கு படையுடன் வருகிறான்? நாம் Facebook ல் அவனது எல்லா போஸ்ட்டுகளுக்கும் பாரபட்சம் பாக்காமல் லைக் செய்கிறோமே. பிறகு ஏன்?
அமைச்சர் :
நீங்கள் அவனது அந்தபுறத்தில் உள்ள ராணிகளுக்கு Friend Request கொடுத்தீர்கலாமே?
மன்னர் :
ஆமாம் அமைச்சரே.அவர்களது Profile picture நன்றாக இருந்தது. அதான் Request கொடுத்தேன்.பிடிக்கவில்லை என்றால் என்னை Block செய்துவிட்டு போகவேண்டியது தானே.அதற்காக படையெடுத்து வருவது சரியல்ல.
அமைச்சர் :
மன்னா, நீங்கள் அவன் அரண்மனை காவலாளி வேலை நேரத்தில் தூங்கியதை போட்டோ எடுத்து Facebook ல் போட்டுள்ளீர்கள். இதனால் அவர்களது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளதாம்.
மன்னர் :
நான் வேட்டைக்கு சென்று வரும் வழியில் அவன் உறங்கியதை கண்டேன்.அதான் ஒரு போட்டோ எடுத்தேன்.
அமைச்சர் :
அதை நீங்கள் ஏன் அவனது Inbox message ல் கூறாமல்,Public post ஆக வெளியிட்டீர்கள்.
மன்னர் :
தெரியாமல் செய்துவிட்டேன் அமைச்சரே. இப்போ என்ன செய்வது?
அமைச்சர் :
உடனே பேஸ்புக்கில் Feeling sad. cold fever'னு ஸ்டேட்டஸ் போட்டு, பக்கத்து நாட்டு மன்னரை Tag செய்யுங்கள்.
மன்னர் : இதோ.இப்பவே Login செய்து,போஸ்ட் செய்கிறேன்.
அமைச்சர் :
என்னையும் Comment box ல் மென்ஷன் செய்யுங்கள் மன்னா. நானும் வருகிறேன்.
மன்னர் : அப்படியே ஆகட்டும்.
படித்ததை பகிர்ந்துள்ளேன்...

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth