10.05.2016 செவ்வாய் தலைப்பு செய்திகள்

🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹

🌟10.05.2016 * செவ்வாய்🌟

🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻

⭕மாநில செய்திகள்⭕

🔯 மோடி லாபத்திற்கு வழிசொன்னால், ஜெயலலிதா நஷ்டத்திற்கு வழிதேடுவது ஏன்? மத்திய மின்துறை மந்திரி பியூஷ் கோயல் கேள்வி

🔯 விரும்பிய வேட்பாளர்களுக்கு ஓட்டு போடலாம்; ‘எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

🔯 ‘அரசாங்கம் அமைக்க முன் அனுபவம் வேண்டும் என்பது பிதற்றல்’ விஜயகாந்த் பேட்டி

🔯உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

🔯 தேர்தல் ஆணையம் கெடுபிடி காரணமாக அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை வெகுவாக குறைந்தது

🔯 ஓட்டுக்கு பணம் வாங்குவதை மாணவர்கள் தான் தடுக்க வேண்டும்; வைகோ பேச்சு

🔯வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. - தி.மு.க. பணம் வினியோகிப்பதை தடுக்க வேண்டும்; தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் அன்புமணி வேண்டுகோள்

🔯 அரிய நிகழ்வாக சூரியனை புதன் கோள் கடந்து சென்ற காட்சி; தமிழகத்தில் ஏராளமானோர் கண்டு களித்தனர்

🔯 எட்டயபுரம் அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி

⭕தேசிய செய்திகள்⭕

🍍 மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🍍 என் அஸ்தி இங்குதான் கரைக்கப்படும்; என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன்; சோனியா காந்தி உருக்கம்

🍍 மோடியின் கல்விச் சான்றிதழை பா.ஜனதா தலைவர்கள் வெளியிட்டனர்; கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தல்

🍍 விமான கடத்தலின்போது யார் கொல்லப்பட்டாலும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை; பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

🍍 உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க 9 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை

🍍 145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டம் ரத்து ஆகாது; திருத்தம் செய்வது பற்றி பிரதமர் மோடி இறுதி முடிவு

🍍 கட்டணம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகள்; பாராளுமன்றத்தில் மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

🍍 ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா பெயரை பிரதமர் குறிப்பிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி; மேல்-சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

🍍 ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரசுக்கு நெருக்கடி கொடுப்பதா? பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்

🍍 மகாராஷ்டிர வறட்சி நிலைக்கு உதவ முன்வந்த சீன தலைவருக்கு பட்னாவிஸ் பாராட்டு

🍍மாநிலங்களவைக்கு இன்று வந்தார் சச்சின் தெண்டுல்கர்

🍍 உத்தர பிரதேசத்தில் சிறைக்குள் கோஷ்டி மோதல்: 17 பேர் மீது வழக்கு பதிவு

🍍 வாலிபர் சுட்டு கொலை விவகாரம்: ஐக்கிய ஜனதா தள எம்.எல்.சி.யின் கணவர் மற்றும் பாதுகாவலருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

🍍 ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பை அதிகரிக்க கோரி உள்துறை மந்திரியுடன் காங். தலைவர்கள் சந்திப்பு

🍍 நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளர் இல்லை: ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. தஸ்லிமுதீன்

🍍 டெல்லியில் ஜெர்மன் பெண் டாக்சி டிரைவரால் பாலியல் பலாத்காரம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு

🍍 ஜம்முவில் 2வது சம்பவம்: சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்த வாலிபர் கைது

🍍 பீகாரில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: நிதிஷ் குமார் திட்டவட்டம்

🍍 மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக அருண்ஜெட்லி வெளியிட்ட சான்றிதழ் போலியானது: ஆம் ஆத்மி சொல்கிறது

🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹

⭕உலகச் செய்திகள்⭕

🌍 சீனாவில் நிலச்சரிவு: 10 பேர் பலி; 31 பேரின் கதி என்ன?

🌍 அமெரிக்காவில், விசா மோசடி; இந்தியர்கள் 4 பேர் மீது குற்றச்சாட்டு

🌍 வட கொரிய தலைவரின் அணு ஆயுத கொள்கைக்கு கட்சி பிரதிநிதிகள் ஒப்புதல்

🌍 டொனால்டு டிரம்ப் மோசமான மனிதர் பிரான்ஸ் பிரதமர் மானுவேல்

🌍 6 மாதமாக தாய்பாலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்த தாய் (இங்கிலாந்து )

🌍 சவுதி அரேபியாவில் வீட்டு வேலை இந்தியபெண் சித்ரவதை செய்து கொலை

🌍 70 வயதான பெண்ணின் நடன திறமையை பார்த்து மிரண்ட நடுவர்கள்

🌍ஆப்கானிஸ்தானில் டேங்கர் லாரி-பஸ்கள் மோதல்; 73 பேர் சாவு

⭕விளையாட்டுச் செய்திகள்⭕

🏏 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வெட்டோரி பெயரை பரிந்துரை செய்த விராட்கோலி

🏏 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு அணி 4-வது வெற்றி

⚽ 4 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்பட்டதால் ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி ராஜினாமா

🎾 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; செர்பியா வீரர் ஜோகோவிச் ‘சாம்பியன்

🏀 தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்

🎼 நல்லெண்ண தூதர் நியமன விவகாரம்: ‘இதுவரை ஒலிம்பிக் சங்கம் என்னை அணுகவில்லை’ ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

🌹🌹More education. news @ www.sstaweb.com

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth