மாலை செய்தி 13-5-2016
♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈🙏🌴🌴13-5-2016🌴🌴🙏📡📡📡📡📡📡📡📡📡
♈🇮🇳🌴மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா தாக்கலாகாததால் பிரதமர் மோடி வருத்தம், மாநிலங்கள் பயனடையும் என பேச்சு
♈🇮🇳🌴அமெரிக்கா உடனான பாகிஸ்தானின் உறவு கடினமான நிலையில் உள்ளது அஜிஸ் சொல்கிறார்
♈🇮🇳🌴சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் கைது செய்யப்பட்டவன் தொடர்ச்சியாக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவன் போலீஸ் தகவல்..புதுடெல்லி
♈🇮🇳🌴விடுமுறை எடுப்பது தொடர்பாக வாதம், ராணுவ வீரரால் எல்லைப் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை...வடகாரா...கேரளா
♈🇮🇳🌴ஹிஸ்புல்லா தீவிரவாதக்குழுவின் தளபதி வான் வழி தாக்குதலில் பலி
♈🇮🇳🌴
அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற கண் துஞ்சாமல் கடமையாற்ற வேண்டும் தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
♈🇮🇳🌴அ.தி.மு.க-வின் தேர்தல்அறிக்கை செய்தி வெளியிட்ட அயர்லாந்து பத்திரிகை
♈🇮🇳🌴பெங்களூர், சாம்ராஜ்பேட்டையில் 12 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 37 வயதான மஞ்சுநாத் என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சமபவம் நடைபெற்றுள்ளது.
♈🇮🇳🌴அதிமுக அமைச்சர் பழனிச்சாமியின் சகோதரர் காவலர் ஒருவரை தனது வீட்டில் கட்டிவைத்து அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
♈🇮🇳🌴இந்தியன் வங்கி, வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து திடீர் அதிர்ச்சி அளித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி, வீடு மற்றும் வாகனம் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.20% குறைத்துள்ளது.
♈🇮🇳🌴தமிழக அரசியல்வாதிகள் விவேகம் இல்லாதவர்களா? - கமல்ஹாசனின் அடுத்த தேர்தல் அட்டாக்
♈🇮🇳🌴லெபனானின் தீவிரவாதக்குழுவான, ஹெஸ்பொல்லாவின் மூத்த தளபதிகளில் ஒருவரான, முஸ்தபா பெத்ரதீன், கொல்லப்பட்டார் என்று அக்குழு கூறியிருக்கிறது.
♈🇮🇳🌴பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது'
இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
♈🇮🇳🌴உலகளாவிய ஊழல் ஒழிப்பு மாநாட்டுக்காக லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
♈🇮🇳🌴ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
♈🇮🇳🌴ஊக்க மருந்து பரிசோதனை:கலக்கத்தில் கென்ய வீரர்கள்
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில், ஊக்க மருந்து சர்ச்சை, விளையாட்டு உலகை உலுக்கி வருகிறது.
♈🇮🇳🌴பிரேசில் அதிபர் மீதான பதவிநீக்க விசாரணைக்கு செனட் சபை ஆதரவு
♈🇮🇳🌴தென் ஆப்ரிக்காவின் அரச வானொலியில் இனி 91 சதவீதம் உள்நாட்டு இசை மட்டுமே ஒலிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
♈🇮🇳🌴தாய்மார்களையும், பெரியவர்களையும் தேடிச்சென்று ஓட்டு வேட்டையாடிய மு.க.ஸ்டாலின்; ஆட்சிக்கு வந்ததும் செய்யப்போகும் நடவடிக்கைகள் குறித்து பேட்டி
♈🇮🇳🌴போடி பகுதிகளில் வாக்கு சேகரிப்பு: உயர்த்த பாடுபட்டவர் ஜெயலலிதா அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
♈🇮🇳🌴மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் ஆண்டிப்பட்டி தொகுதியில் கிடப்பில் உள்ள திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. உறுதி
♈🇮🇳🌴வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க 80 பறக்கும் படைகள் இரவில் கண்காணிப்பு கலெக்டர் நாகராஜன் தகவல்..தேனி
♈🇮🇳🌴அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைந்தவுடன் மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லாமலே மாணவர்களை சேர்க்க நடவடிக்கை; ஜெயலலிதா உறுதி
♈🇮🇳🌴சிறார்களை நாடும் சைக்கிள் நூலகம்
ஆப்கானிஸ்தானில் ராணுவத்திற்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையே ஆங்காங்கே அடிக்கடி நடக்கும் சண்டையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அதிலும் அங்குள்ள சிறார்களின் கல்வி பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.
பாமியான் நகரத்தின் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் சபேர் ஹோசேய்னி. சிறார்களின் கல்வியை நினைத்து மனம் வருந்திய சபேர், மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார். அதற்காக தனது மிதிவண்டியில் நூலகத்தை உருவாக்கி வார இறுதி நாட்களில் குழந்தைகள் அதிகம் உள்ள இடங்களை நோக்கி பயணப்படுகிறார். குறைந்தபட்சம் 60 புத்தகங்களோடு சென்று குழந்தைகளுக்கு வாசிக்க கொடுத்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் அறிவுத்தேடலுக்கு உதவுகிறார்.
♈🇮🇳🌴பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம்மை இந்தியாவிடம் ஒப்படைக்காது ப.சிதம்பரம் சொல்கிறார்
♈🇮🇳🌴சோமாலியாவுடன் ஒப்பிட்ட விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை கேரள அரசு பரிசீலனை
♈🇮🇳🌴சி.பி.ஐ.க்கு அமலாக்கப்பிரிவு கடிதம்: விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை தொடங்கியது
♈🇮🇳🌴தோல் அலர்ஜி சிகிச்சைக்காக நடிகை சமந்தா வெளிநாடு செல்கிறார்
♈🇮🇳🌴மேற்கு வங்காள குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு நெருக்கமான தீவிரவாத தலைவன், டாக்காவில் கைது மேலும் 3 பேர் சிக்கினர்
♈🇮🇳🌴பாகிஸ்தானில் கவுரவ கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களை உறவினர்களே சுட்டு வீழ்த்தினர்
♈🇮🇳🌴ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் பாக்தாத் நகரம், தொடர் குண்டுவெடிப்புகளால் குலுங்கியது 94 பேர் கொன்று குவிப்பு
♈🇮🇳🌴மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம்
♈🇮🇳🌴 தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
♈🇮🇳🌴 மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
♈🇮🇳🌴ஆன்மீக தலைவர் பாபா ஹர்தேவ் சிங் கனடா சாலை விபத்தில் பலி
♈🇮🇳🌴 சென்னையில் மே 15 இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு : ஆஸ்திரேலியா ஆய்வு மையம்
♈🇮🇳🌴 தேர்தலன்று மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
♈🇮🇳🌴ராகுல் டிராவிட்-மகிளா ஜெயவர்த்தனே ஐசிசி கிரிக்கெட் குழு உறுப்பினர்களாக நியமனம்
♈🇮🇳🌴 வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் : ராஜேஷ் லக்கானி
♈🇮🇳🌴நாளை மாலை 6 மணிக்குள் பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் : புதுச்சேரி தேர்தல் அதிகாரி
♈🇮🇳🌴 ஒடிசாவில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் ஒதுக்கீடு வழங்க போராட்டம்
♈🇮🇳🌴பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
♈🇮🇳🌴 பொதுக்கூட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்
♈🇮🇳🌴 நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
♈🇮🇳🌴 நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம், கருத்து கணிப்பு வெளியிட கூடாது : ராஜேஷ் லக்கானி
♈🇮🇳🌴 புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை ரெய்டு
♈🇮🇳🌴புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை: நாராயணசாமி
♈🇮🇳🌴அவதூறு வழக்கு சட்டத்தை நீக்க முடியாது : சுப்ரீம் கோர்ட்
♈🇮🇳🌴சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
♈🇮🇳🌴சென்னையில் இன்று அமித்ஷா பிரசாரம்
♈🇮🇳🌴அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது; திங்கட்கிழமை வாக்குப்பதிவு
♈🇮🇳🌴தி.மு.க. ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் சுமை தீர வழிவகை செய்யப்படும்; திருவாரூர் பிரசாரத்தில் கருணாநிதி பேச்சு
♈🇮🇳🌴வங்ககடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது; தேர்தல் அன்று மழை பெய்ய வாய்ப்பு
♈🇮🇳🌴தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம் ---பொள்ளாச்சி-கோவை
♈🇮🇳🌴சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ..ஜோத்பூர்
♈🇮🇳🌴 ஜம்மு-காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு: ஒருவர் பலி, 2 பேர் மாயம்
♈🇮🇳🌴ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்
♈🇮🇳🌴 பார்லி., கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு
♈🇮🇳🌴 புதுச்சேரி : காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு
♈🇮🇳🌴பிரதமரின் கருத்தை திரித்து கூறுவதா: பாஜ., கண்டனம்
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
Comments