இன்றைய முக்கிய செய்திகள் 20/05/16 !
🚨இன்றைய🚨முக்கிய🚨செய்திகள் 20/05/16 !
கேரளாவில் இடதுசாரி கூட்டணி சார்பில் பினராயி விஜயன் முதல்வராகிறார். இடதுசாரி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் அச்சுதானந்தன்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு கருணாநிதி நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஜூன் மாதம் கத்தார் செல்கிறார்.
பணத்தால் நாங்கள் தோற்றோம் அதிமுகவும் திமுகவும் பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளன மக்களும் 'நல்ல திட்டங்கள் தேவையில்லை, பணம் மட்டும் போதும்' என நினைத்து விட்டனர் - அன்புமணி ராமதாஸ்.
பிஇ பிடெக் போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 24 -ம் தேதிக்குள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும் - அண்ணா பல்கலைக்கழகம்.
தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு - அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.
காந்திகிராமத்தில் கரூர் திண்டுக்கல் ரயில் பாதையில் ஆயுதப்படை காவலர் லோகநாதன் என்பவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.
பட்ஜெட் நிதியை மக்களுக்கு பணமாக பிரித்துக் கொடுத்துவிடலாம் அன்புமணி ராமதாஸ் புது யோசனை.
மக்களின் தீர்ப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது. வருங்காலங்களில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும் - ஜிகே வாசன்.
தேனி அல்லிநகரம் அம்பெத்கார் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து மாவு, அரிசி, பருப்பு, சிலிண்டர் உள்ளிட்டவைகளை கடத்துவதாக அங்கன்வாடி ஊழியர் நாகஜோதி மீது குற்றச்சாட்டு.
தோ்தல் தோல்வி எதிரொலி : கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அதிமுக நகர செயலாளா் கோபி காா் எாிப்பு எம்.ஜீ.ஆா். சிலை சேதம் திமுகவினாா் மீது நடவடிக்கை எடுக்க கோாி அதிமுகவினா் சாலை மறியல்.
திருவாரூர் அருகே தேர் கவிழ்ந்து விபத்து ஆனதில் 2 பேர் உயிரிழப்பு.
Comments