தினம் ஒரு குட்டிக்கதை.
28 வயதுள்ள பெண் ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள்.
அவள் கடவுளிடம்,
''ஆண்டவா,என் காலம் முடிந்துவிட்டதா?'' என்று துக்கமாக கேட்டாள்.
அதற்கு கடவுள்,
"இல்லை... இல்லை...உனக்கு இன்னும் 40 வருடம் இருக்கின்றன.நீ 40 வருடம் உயிர் வாழலாம்" என்றார் கடவுள்.
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.அப்பெண் பிழைத்துக் கொண்டாள்.பிறகு இரண்டு மாதம் கழித்து அப்பெண் தன்னை அழகு படுத்திக்கொள்ள பியூட்டி பார்லர்க்கு சென்று,எல்லா மேக்கப்பையும் போட்டுக்கொண்டு ரோட்டில் நடந்து வந்தாள்.கடை வீதியில் நின்ற எல்லா இளைஞர்களும் அவளை சைட் அடிப்பதை கண்டு ரசித்துக்கொண்டே ரோட்டில் நடந்தாள்.அப்போது வேகமாக வந்த தண்ணி லாரியின் டயரில் சிக்கி,சம்பவ இடத்திலயே அப்பெண் உயிரிழந்தாள்.பிறகு கடவுளின் முன்பாக கொண்டு வரப்பட்டாள்.
அப்பெண் கடவுளிடம் கோபமாக கேட்கிறாள்,
"எனக்கு சாவு வருவதற்கு இன்னும் 40 வருடங்கள் இருப்பதாகச் சொன்னீர்களே,அப்
போ ஏன் லாரி விபத்திலிருந்து என்னை காப்பாற்றவில்லை?" என்று கேட்டாள்.
அதற்கு கடவுள்,
"அட,,,நீயா அது? அடையாலம் தெரியாமல் போய்விட்டதே" என்றாராம் கடவுள்.
.
# நீதி:-
பொண்ணுங்க ஓவரா மேக்கப் போட்டா,கடவுளுக்கே கன்பியூஸ் வரலாம்.
Comments