லீலை கண்ணன் கதைகள்...45…கேசி-வ்யோமா வதம்..

*லீலை கண்ணன் கதைகள்...45…கேசி-வ்யோமா வதம்...*
கம்சனால் ஏவி விடப்பட்ட கேசி, பிருந்தாவனத்திற்கு வந்தான். ஒரு பெரிய குதிரை உருவத்தை போல மாறினான், அவன் கண்கள் பெரியதாக இருந்தது, சுவாசம் நெருப்பை வெளியிட்டது. பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து மக்களும் அதன் கனைத்த குரலை கண்டு அஞ்சி நடுங்கினர். அது சிங்கத்தின் கர்ஜனை போல் இருந்தது, கிருஷ்ணனை அனைத்து இடத்திலும் தேடி திரிந்தது, இந்த விஷயம் கிருஷ்ணனுக்கு தெரியவந்தது. கிருஷ்ணன் அது கம்சன் ஏவிய மற்றொரு அரக்கன் என்று அறிந்தான், உடனே அதை தேடி சென்றான்.
கிருஷ்ணனை பார்த்ததும் அதிக சத்தத்துடன் கனைத்து கொண்டே அதன் இரண்டு பினங்கல்களால் அவனை எட்டி உதைத்தது. அதை கிருஷ்ணன் தவிர்த்து, அதன் கால்களுக்கு இடையில் சென்று அதனை சுழற்றி தூரம் எறிந்தான். அந்த குதிரை மயக்கமுற்றது. ஆனாலும் கிருஷ்ணன் விடவில்லை. அதன் வாய்க்குள் அவன் இடது கையை விட்டு அதன் பற்களை பிடித்து கொண்டான். உடனே குதிரை அவன் கையை கடிக்க முயன்றது, ஆனால் கிருஷ்ணனின் கை தான் எரியும் ஜோதியாயிற்றே, அவன் கைகள் வளர தொடங்கின, அந்த குதிரையால் முச்சு கூட விட முடியவில்லை, முழு உடலும் வியர்க்க ஆரம்பித்தது, வேதனையால் நெளிய ஆரம்பித்தது, தரையில் விழுந்து இரத்தத்தை கக்க ஆரம்பித்தது, அது இறக்கும் வரை கிருஷ்ணன் குதிரை வாயில் இருந்து கையை வெளியே எடுக்கவில்லை, சில மணி துளிகளில் அது இறந்தது. பிறகு கையை வெளியே எடுத்தான் கிருஷ்ணன்.
இதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த நாரதர், கிருஷ்ணனிடம் வந்து அவர் கால்களில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினர். அந்த தெய்வமே கிருஷ்ணன் உருவில் மனிதனாக பூமியில் தோன்றியதாக எண்ணி அவரை போற்றி பாடல்களை பாடினார். கம்சனின் எல்லா திட்டங்களையும் கிருஷ்ணனிடம் கூறினார். கிருஷ்ணன் அதை கேட்டு புன்னகைத்தான். இதை கூறிவிட்டு நாரதர் கிளம்பினர்.
மற்றொரு நாள் கிருஷ்ணன் அவனது நண்பர்களுடன் பசுக்களை மேய்க்க கிளம்பினான், அவர்கள் கண்ணாமூச்சி விளையாட எண்ணினார்கள். அதில் சிலர் பசுவை காப்பவராகவும், சிலர் பசுக்களை திருடுபவராகவும் விளையாடினர். அந்த நேரம் பார்த்து பல மாய சக்திகளை உடையவனான வ்யோமா என்ற அசுரன், கோபியர் உருவம் கொண்டு அந்த குழந்தைகள் கூட்டத்தில் கலந்தான். அவர்களை ஒவ்வொருவராக கூட்டி சென்று ஒரு மலை குகையில் அடைத்தான். ஐந்து ஆறு சிறுவர்கள் தான் மிச்சம் இருந்தனர், இதை கிருஷ்ணன் அறிந்து கொண்டான், பிறகு கிருஷ்ணனையும் அந்த அசுரன் பிடித்து கொண்டான். உடனே கிருஷ்ணன் மலை போன்று பெரியதாக உருவம் எடுத்தான், அந்த அசுரனை கிருஷ்ணன் இறுக்கி பிடுத்து கொண்டான். அசுரனால் நகர கூட முடியவில்லை. எவளவோ முயற்சிதான், ஒன்றும் நடக்கவில்லை. கிருஷ்ணன் அசுரனை தரையில் தூக்கி அடித்து கொன்றான்.
பிறகு அவன் நண்பர்கள் அனைவரையும் குகையில் இருந்து வெளியே கொண்டு வந்தான்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth