கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள் - 66

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள் - 66

பொறாமை !!

II ராதேக்ருஷ்ணா II

பொறாமை  . . .

இந்த பொறாமைக்குச் சமமான
பயங்கரமான ராக்ஷசன்
உலகில் எவருமில்லை . . .

இந்த பொறாமை ஒன்றே
மனிதனின் நிம்மதியைக்
குலைக்கப் போதுமானது . . .

இந்தப் பொறாமையினால் தானே
துரியோதனன் குருக்ஷேத்திர
யுத்தத்திற்கு தயாரானான் . . .

இந்தப் பொறாமையினால் தானே
யாதவப்ரகாசர் ஸ்வாமி இராமானுஜரைக்
கொல்ல முயற்சித்தார் . . .

இந்தப் பொறாமை எத்தனை பேரை
தின்று தீர்த்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை சகோதரர்களை
பிரித்துவைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை குடும்பங்களை
நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை முறை
நம்முடைய மனதை நோகடித்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை முறை
மற்றவரை அவமானப்படுத்த
நம்மைத் தூண்டியிருக்கிறது . . .

இந்தப் பொறாமை எவ்வளவு தடவை
நம்மை அடுத்தவரின் கஷ்டத்தைப் பார்த்து
சந்தோஷமாக சிரிக்கவைத்திருக்கிறது . . .

இந்தப் பொறாமை எத்தனை பலமாக
பலமுறை நம்முடைய ஞானத்தை
அழித்துப்போட்டிருக்கிறது . . .

ஹே பொறாமையே !
என்னை விட்டு ஓடி விடு . . .

ஹே பொறாமையே !
தயவு செய்து என்னை வாழ விடு . . .

ஹே பொறாமையே !
என் நிம்மதியைத் திருடாதே . . .

ஹே பொறாமையே !
என் மனதைக் கெடுக்காதே . . .

ஹே பொறாமையே !
என்னை ராக்ஷசனாக்காதே . . .

ஹே பொறாமையே !
எனது நல்ல சிந்தனைகளைக் கொல்லாதே . . .

ஹே பொறாமையே !
என்னைக் கெடுக்காதே . . .

ஹே பொறாமையே !
என்னை அழித்துவிடாதே . . .

ஹே க்ருஷ்ணா . . .
இந்தப் பொறாமையிடமிருந்து
என்னைக் காப்பாற்றிக்கொள்ள
என்னால் முடியவில்லை . . .

ஹே க்ருஷ்ணா . . .
இந்தப் பொறாமையின்
தீயிலிருந்து என்னை மீட்டு
உன் அருகில் வைத்துக்கொள் . . .

ஹே க்ருஷ்ணா . . .
எனக்கு நன்றாகத் தெரியும் . . .
உனக்கு இந்தப் பொறாமை
துளிகூடப் பிடிக்காது . . .

எனக்கும் இந்தப் பொறாமை
துளிகூடப் பிடிக்கவில்லை . . .

ஆனால் இந்தப் பொறாமைக்கு
என்னை ரொம்பப் பிடித்திருக்கிறது . . .

அதனால் என்னை பூரணமாக
அனுபவித்துக்கொண்டிருக்கிறது . . .

தயவு செய்து நீ என்னை அநுபவி . . .

ஐயோ . . .
இந்தப் பொறாமையை கொன்றுவிடு . . .

என் க்ருஷ்ணா. . .
என்னைக் காப்பாற்று . . .
என்னைக் கரையேற்று . . .

பலகோடி ஜன்மாக்கள்
பொறாமையினால் வீணாகிவிட்டது . . .

இனியும் எனக்கு ஒரு பொறாமை
வேண்டவே வேண்டாம் . . .

பொறாமை இல்லாத மனம்
எனக்கு அருள் செய் இறைவா . . .

ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!

கிருஷ்ணனின் இரவு வணக்கம் நண்பர்களே !!

என்றும் அன்புடன் !!
தெய்வீகம்
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth