நண்பன் 1:- மாப்ளே! படிக்கற காலத்தில ஒழுங்கா படிக்காம போனதன் நஷ்டத்தை நான் இப்பத்தான் உணர்றேன்!
நண்பன் 2:- அப்படி என்னதாண்டா நடந்திச்சு மாப்ளே?
நண்பன் 1:- ஒரே ஒரு எழுத்து தப்பா போனதனால, என் மேல சந்தேகப்பட்டு என்னோட காதலியே பிரிஞ்சுப் போயிட்டாடா!
நண்பன் 2:- அப்படி என்ன எழுத்தைத்தாண்டா மாற்றி போட்ட?
நண்பன் 1:- நாலு நாளா IMO, SKYPE எதிலயுமே "வீடியோ கால்" ஏதும் பண்ணலயே ஏன்னு கேட்டு மெசேஜ் பண்ணி இருந்தா! வீட்ல வைபை(Wifi) தகராறு பண்ணிக்கிட்டு இருக்குன்னு டைப் பண்றதுக்கு பதிலா, வைப்(Wife) தகராறு பண்ணிக்கிட்டு இருக்குன்னு தப்பா டைப் பண்ணி தொலச்சிட்டேன்!
நண்பன் 2:-?😠?😠?😠?😠?😠?😠?😠?😠?
Comments