ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும்
குட்டிக்கதை:!!!
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர் மேல் சீடனுக்குக் கோபம்.
தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார்.
பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக்களைத்தான்.
கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர்.
சில நிமிடங்களிலேயே பிடித்தான். குருநாதர் சொன்னார்
“ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று”.
பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!!
“எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம்.
Comments