கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள்
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரே ஒரு நாளைக்கு 20 நிமிசம் வரிசையில் நின்று வாக்களித்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பிய ஊடகங்களே,....
திங்கள் கிழமை தேர்தல் பணிக்கு ஞாயிற்றுக் கிழமையே கிளம்பி தான் தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடிக்குச் சென்று, சரியா சாப்பிடாம, அன்னைக்கு நைட்டு சரியா தூங்காம, வீட்டுல உள்ள குழந்தைகள் சாப்பிட்டாங்களா ன்னு கவலையோட சரியாக்கூட தூங்காம மறுநாள் தேர்தல் நாள் அன்னைக்கு காலைல 4 மணி க்கே எழுந்திருச்சி குளிச்சி , 7 மணி க்கு தேர்தல் பணியை ஆரம்பிச்சு, அவசரம் அவசரமா சாப்பிட்டு, இடைவிடாமா தேர்தல் பணியை செஞ்சிட்டு, எதுவும் அசம்பாவிதம் நடந்துடாம இருக்கணும் கடவுளே ன்னு சாமிய கும்பிட்டுகிட்டு, கணவர்கிட்ட இருந்து வர்ர போனைக்கூட எடுத்து பேச முடியாம ,மதியமும் அவசரம், அவசரமா சாப்பிட்டு ஒரு வழியா 6 மணி க்கு தேர்தல் பணியை முடிச்சி , இயற்கை கடன்களைக்கூட சரியா போக முடியாம அவதிப்பட்டு, பெட்டிய நள்ளிரவு எடுக்குற வரைக்கும் காத்திருந்து மிட் நைட்டு ல பஸ்ஸோ, காரோ கிடைக்குறத புடிச்சு ஊர் வந்து சேர்ந்து சரியாக்கூட தூங்காம தனது கடமையை சரியா நிறைவேற்றிய எங்களின் ஆசிரிய
சகோதர, சகோதரிகளை எல்லாம் ஊடகங்களின் கண்களுக்குத் தெரியாதா?
Comments