ஆலய விருட்சங்கள்

ஆலய விருட்சங்கள்

சந்திரன் திருத்தலம்
திங்களூர் திருத்தலம்

மகா விஷ்ணுவின் இதயத்தில் இருந்து தோன்றியவர் .பாற்கடலைக் கடையும் போது திருமகளுக்கு முன்னதாக தோன்றியவர்.அத்திரி முனிவர் அனுசியா தம்பதிக்கு மகனாக அவதரித்தவர். நவகிரகங்களில் சுபக் கிரகர்.மூவகை குணங்களில் சாத்வீக குணம் உடையவர் என்றெல்லாம் போற்றப் படக்கூடியவர் சந்திரன்.
நவக்கிரகங்களில் 2ம் இடத்தைப் பெற்றவராகிய சந்திர பகவானுக்குரிய திருத்தலம் திங்களூர்.
கும்ப கோணத்திலிருந்து சுமார் 33கிமீ தொலைவில் உள்ளது.
இங்கே ஸ்ரீபெரிய நாயகி சமேதராக ஸ்ரீகயிலாத நாதர் கோவில் கொண்டுள்ளார்.
திருநாவுக்கரசர் பாடிப்பரவிய தலம்.
7ம் நூற்றாண்டுக்கு முந்தியதாம்.தனிச்சந்நிதியில் அருளும் சந்திரனுக்கு சிறப்பிடம் உண்டு இங்கே!
தட்சனின் சாபத்தால் தேய்ந்து போன சந்திரன் சிவனருளால் வளரும் சக்தி பெற்ற தலம்.
இங்கே வில்வம்,வாழை என்று 2 தல விருட்சங்கள் உள்ளது சிறப்பு.
'ஏக வில்வம் சிவார்ப்பணம்' என்பர்.
அத்தனை மகத்துவம் வாய்ந்த்து.இதன் இலை,பூ,பிஞ்சு,காய்,பழம்,வேர்,பிசின்,பட்டை,ஓடு என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்த்து.
திங்களூரின் தல விருட்சமாக வாழையும் இடம் பெற்றுள்ளது.அப்பூதியடிகளின் மைந்தன் பாம்பு கடித்து இறந்து போக திருநாவுக்கரசரின் பதிகத்தால் அவன் உயிர் பெற்ற வரலாறே காரணம்.
தேக ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களும் வாழைப் பழத்தில உள்ளது.தண்டு சிறு நீரக்க் கோளாறை நீக்கும்.வாழைப்பட்டையின் சாறு நாகத்தின் விஷத்தையே முறிக்குமாம்.வரையில் சாப்பிட்டால் அனைத்துக் குறைகளும் நீங்கும்.வாழைப் பூ பெண்கள் சாப்பிடுவதால் நலம் உண்டாக்கும்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட வில்வம்,வாழையை தல விருட்சமாக்க் கொண்ட ஆலயத்தை வலம் வந்து வணங்கி வளம் பெறுங்கள்!.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth