அஷ்டலட்சுமி

அஷ்டலட்சுமி

1.ஆதிலட்சுமி

மகாலட்சுமி,பிருகுமுனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம்.இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.

2.தனலட்சுமி

பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம்,சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.

3.தானியலட்சுமி

வேளாண்மை வளம் பெருக்கும் தேவி.பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்தஎண்கரம் கொண்டருளும் தாயார்.

4.கஜலட்சுமி

கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள்.பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.

5.சந்தானலட்சுமி

குழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.

6.தைரியலட்சுமி

வீரம், வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள்.

7.விஜயலட்சுமி

யுத்தங்களில் மாத்திரமன்றி, எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள்.சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.

8.வித்யாலட்சுமி

அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth