பகவான்ஸ்ரீ ரமணமகரிஷி கூறிய “ மாப்பிள்ளைத் தோழன் “ வேதாந்தக் கதை

★பகவான்ஸ்ரீ ரமணமகரிஷி      கூறிய “ மாப்பிள்ளைத் தோழன் “ வேதாந்தக் கதை★

ஸ்ரீ ரமண பகவானின் உபதேசங்களில் , “ நான் யார் ? “ என்ற ஆத்ம விசாரம் , முதல் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

இதை விளங்கும் வகையில் அவர் , ‘ மாப்பிள்ளைத் தோழன் ‘ என்று ஒரு கதை கூறியிருக்கிறார்.

அந்தக் கதையை இங்கு நான் என்னுடைய போக்கில் குறிப்பிடுகிறேன் :

ஒரு திருமண வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வண்டிகளில் வந்து கொண்டிருந்தார்கள்.

அங்கு குறும்புக்கார இளைஞன் ஒருவன் முன்பே சென்றிருந்தான்.

அவன் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை – பெண் வீட்டார் சார்பாக தான் வரவேற்பதாக கூறி சிறந்த முறையில் வரவேற்றான்.

அவன் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் இருந்த கூஜா , பை போன்ற பொருட்களைப் பெற்றுக் கொண்டு – அவர்களுடன் அன்புடன் பேசிக்கொண்டிருந்தான்.

இது போலவே அவன் பெண் வீட்டுக்காரர்களிடம் நடந்துகொண்டான்.
பெண் வீட்டுக்காரர்கள் , அந்த இளைஞன் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களில் ஒருவன் ‘ என்று நினைத்து , அவனுடன் நல்ல முறையில் சகஜமாக மனம் விட்டு பழகினான்.

திருமண வீட்டில் உணவு போன்ற அனைத்து வசதிகளையும் , அவன் மூலமாக அவன் சொன்னபடி மற்றவர்கள் அனைவரும் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த திருமண வீட்டில் , இரண்டு நாட்களாக அவனது ஆட்சிதான் நடந்தது. அவன் அங்கு அதிகாரம் செலுத்தினான்.

இரண்டு நாட்கள் கழித்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஊர் திரும்ப ஆரம்பித்தார்கள்.  

அப்போது மாப்பிள்ளை வீட்டிக்காரர்களும் , பெண் வீட்டுக்காரர்களும் மட்டும் அமர்ந்து , ஆர அமர பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்த உரையாடலின்போது மாப்பிள்ளை வீட்டார் , “ நீங்கள் அனுப்பிய இளைஞன் மிகவும் நல்லவன் அவன் எங்களுக்கு இரண்டு நாட்களாக மிகவும் உதவியாக இருந்தான் “ என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட பெண் வீட்டுக்காரர்கள் மிகுந்த வியப்புடன் , “ நீங்கள் சொல்லுவதுபோல் நாங்கள் அந்த இளைஞனை அனுப்பவில்லையே ! நீங்கள் குறிப்பிடும் இளைஞன் , பெண் வீட்டுக்காரர்களாகிய எங்களைச் சேர்ந்தவன் அல்ல

. அந்த இளைஞனை நாங்கள் , மாப்பிள்ளை வீட்டுக்காரர்களாகிய உங்களைச் சேர்ந்தவன் என்று அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம் ! “ என்றார்கள்.

உடனே அங்கு , “ அப்படியானால் அவன் யார் ? “ என்ற கேள்வி எழுந்தது.

அந்த இளைஞன் பற்றி அவர்கள் விசாரிக்கத் தொடங்கியவுடன் , அந்த இளைஞன் மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.

அதுபோல் , ‘ நான் என்னும் அகந்தை எது ? அது எங்கிருந்து புறப்படுகிறது ? ‘ என்று ஆன்மிக சாதகர்கள் உள்முகமாக ஆராய்ந்தால் விசாரித்தால் , அந்த அகந்தை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

ஸ்ரீ ரமண பகவான் தமது ‘ உள்ளது நாற்பது ‘ என்ற படைப்பில் “ தேடினால் ஓட்டம் பிடிக்கும் பேய் அகந்தை “ என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி :ஸ்ரீரமணமந்திரம்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth