ஒரு குக்கிராமத்தில் சில களப் பணியாளர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்கிற தலைப்பில் வகுப்பெடுத்து விட்டு வந்தார் டாக்டர் ...

சிரிக்கவும் சிந்திக்கவும்.
                 $$$$$
ஒரு  குக்கிராமத்தில் சில
களப் பணியாளர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்கிற தலைப்பில் வகுப்பெடுத்து விட்டு வந்தார் டாக்டர் ...

பாம்பு கடித்தால் உடனே மேலும் கீழும் கட்டுப் போட்டு விஷத்தை உறிஞ்சி துப்பி விட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு வெளியில் வந்தார்

வந்த பணியாளர்கள் அனைவரும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றாலும் ஆர்வத்தோடு கற்றது போல் தெரிந்தனர்...

சற்று நேரத்தில் திடுமென கூச்சல்...

“ டாக்டர்.., டாக்டர் உடனே வாங்க.. ”

ஒரு பாம்பாட்டி வெற்றுக் கூடையை வைத்துக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தார். அடடா, யாரையோ பாம்பு கடித்திருக்க வேண்டும்..

“ முதல்ல முதலுதவி செய்யுங்க. நான் சொன்ன மாதிரி.. ” நான் ஆணையிட்டேன். “ அப்புறம் நோயாளியை கூட்டிட்டு வாங்க.. ”

கொஞ்ச நேரத்தில்..

என் மேஜைக்கு வந்தது..

உடம்பெல்லாம் அங்கங்கே நூல் கண்டால் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பாம்பொன்று..!

என்னய்யா செஞ்சீங்க என்றால் நீங்கதானே சொன்னீங்க, கட்டுப் போடணும், விஷத்தை உறிஞ்சித் துப்பணுமுன்னு...

வாயில பான்பராக் இருந்தாங்காட்டியும் பாம்பு மயங்கிடுச்சு என்றனர்...!

பக்கிப் பய புள்ளைகள் பாம்புக்கா முதலுதவி செய்திருக்கின்றனர் ? ? ?

முதலுதவி பற்றி சொன்னவள் யாருக்குச் செய்வது என்று தெளிவாகச் சொல்லவில்லையோ?

“ ஐயோ, அந்தாளு எங்கே? ”

“ பாம்பு கடிச்ச இடத்துல சுண்ணாம்பு தடவிட்டு அப்போதே கிளம்பிட்டாரே.. ”

ஹூம்... என்னதான் கற்றுக் கொடுத்தாலும் ஒரு வயசுக்கு மேல் சொந்த புத்திதான் நிற்கும் போலும்..!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth