இன்றைய இலக்கணம் பொருள்கோள் எட்டில் இரண்டு: மொழிமாற்றுப் பொருள்கோள்
இன்றைய
இலக்கணம்
----------------------------
பொருள்கோள்
எட்டில் இரண்டு:
""""""""""""""""""""""""""""""
மொழிமாற்றுப்
பொருள்கோள்
********************
தகுதியான
பொருள்களுக்
குப் பொருந்தும்
மொழிகளைத்
(சொற்களை)
தனித்தனி
கூட்டி ஓர்அடியுள்
சொல்வது.
(எ.டு)
சுரை ஆழ
அம்மி மிதப்ப
வரைஅனைய
யானைக்கு
நீத்தம்
முயற்கு
நிலைஎன்ப
கானக நாடன்
சுனை.
-----இதில்,முதல்
அடியில்,சுரை
என்பதற்கு
மிதப்ப என்றும்,
அம்மி என்பதற்கு
ஆழ என்றும்,
இரண்டாம்
அடியில்,
யானைக்கு
என்பதற்கு
நிலை என்றும்,
முயற்கு
என்பதற்கு
நீத்தம் என்றும்,
கூட்டிப்பொருள்
கொள்க.
இவ்வாறு
ஓரடியுள் உள்ள
சொற்களை
மாற்றிக்கூட்டிப்
பொருள்
கொள்வதால்
இது மொழி
மாற்றுப்பொருள்
கோள் என்று
வழங்கப்படும்.
Comments