அத்திப்பழத்தின் நன்மைகள்
அத்திப்பழத்தின் நன்மைகள்
அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது உடலை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, கோடையில் ஆரோக்கியமாகவும் வைக்கும்.
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப்பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம். மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டுவலிகள் குணப்படும்.
அஜீரணக் கோளாறுகளுக்கு அத்திக்காயை சுத்தப்படுத்தி அதை இடித்து சாறு எடுத்து அதனோடு ஓமத்தையும் அரைத்து, கரைத்துச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். அத்திப்பழத்தை சிறிதுசிறிதாக நறுக்கி அதை தேனில் ஊறவைத்து தினமும் சில துண்டுகளை சாப்பிட்டு வந்தால் இருதயத்திற்கு வலிமை தரும்.
தினமும் ஐந்து அத்திப்பழங்களை காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்படுத்தலாம்.
சீமை அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தினால் உண்டாகும் வறட்டு இருமலை குணப்படுத்தலாம். அத்திப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், நுரையீரலைப் பாதுகாக்கும்,தினமும் இப்பழத்தை பசும்பாலில் போட்டு காய்ச்சி பருகிவர நல்ல தூக்கத்தை தரும்.
குழந்தைகளை நோயின்றிப் பாதுகாக்கும், வயதானவர்களை பலமுள்ளவர்களாக வைத்திருக்கும்.
Comments