சிந்திப்பீர்..
பள்ளியறை பூஜை எப்படி செய்யவேண்டும்.
இதுகாலம் சுவாமி செல்லும் வழியில் சிவப்பு கம்பளம் விரிக்கும் வரை வந்தோம்.
இனி.
இந்த சிவப்பு கம்பளத்தில் குறுக்கே யாரும் செல்லக்கூடாது.
மேலும் உற்சவ மேனிக்கு கண்டிப்பாக இண்டை மாலை அணிந்திருக்க வேண்டும்.
சுவாமி சுற்றிவரும் பிரகாரத்தில் தூபம், விளக்கு (தீபந்தம்), சாமரம் வீசவும், சங்கொலி, செவண்டி, துத்தம், திருச்சின்னம், பேரிகை, முரசு, முழவு, போன்ற இசைகருவிகளும்..
அதோடு வேதமந்திரங்கள் ஒலிக்கவும், ஓதுவார்கள் திருமுறை பாடவும், நாட்டிய பெண்கள் நடனம் ஆடவும், மக்கள் ஹரஹர சிவ சிவ என விண்ணை அதிர முழக்கம் இடவும் என இன்னும் நிறையசம்ரதாயம் உள்ளன.
நிறைவாக அம்பாள் சன்னதியில் அடைந்து சுவாமி உள்ளே செல்லவும்.
தொடரும்.
Comments