வாட்ஸாப் கோல்டன் வெர்ஷன்! - இது புது மோசடி

வாட்ஸாப் கோல்டன் வெர்ஷன்! - இது புது மோசடி
உலகையே இணைக்கும் செயலைச் செய்து கொண்டிருக்கும் ஆப்ஸ்-  வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர். இதில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகிப் போனது. நம்மில் பலர் இதில் வரும் செய்திகளை அதிகளவு பகிர்ந்து கொள்வோம். அதில் எது உண்மை, எது பொய் என்றே தெரியாது.

ஃபேஸ்புக்கில் பல பொய்யான (fake) தகவல்கள் வருவது போன்றே, வாட்ஸ் ஆப்பிலும் பல தகவல்கள் வரத் தொடங்கின. ஆனால், "ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, வாட்ஸ் ஆப்பையே கடித்த" கதையாக 'WhatsApp Golden Version 4.0' எனும் பெயரில் ஒரு போலி தகவல் பரப்பப்படுகிறது.

• வாட்ஸ் ஆப் வீடியோ கால்
• தெரியாமல் தவறுதலாக அனுப்பிய மெசேஜை டெலீட் செய்து கொள்ளலாம்.
• ஒரே நேரத்தில் 100 படங்களை அனுப்பலாம்.
• ஃப்ரீயாக ஃபோன் கால் செய்யலாம்
• வாட்ஸ்  அப்பில் தீம்களை மாற்றலாம்
• இலவசமாக SMS அனுப்பலாம்.
• யார் யார் நம் டி.பி ஸ்டேட்டஸ் பார்த்தார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் - இவையெல்லாம் இதன் தனித்தன்மைகள் எனப் 'பீலா' விடுகிறது அந்த தகவல். 

நம் மக்களும் இதைப் பார்த்ததும் Smiley போல மாறி,  அந்த லிங்க்கை க்ளிக் செய்கிறார்கள். அப்படி அந்த லிங்க்கை க்ளிக் செய்தால்,  ஒரு இணைய முகவரிக்குச் செல்லும். டவுன்லோட் செய்யலாம் எனப் பார்த்தால், 15 பேருக்காவது Friend request அனுப்பினால்தான் "Whatsapp version 4.0" ஐ டவுன்லோட் செய்ய முடியும் எனும் செய்தி வரும். இப்படி ஒரு வெர்ஷன் பற்றிய தகவல் அதிகாரப் பூர்வமாக வரவே இல்லையே, பிறகு எப்படி டவுன்லோட் செய்ய முடியும் என யோசிக்கக்கூட நேரமில்லாமல் உடனே 15 பேர் என்ன... 45 பேருக்கு அனுப்புவோம்.

சரி... அனுப்பி விட்டோம், டவுன்லோட் செய்யலாம் எனப் பார்த்தால், நாம் ஒன்றிரண்டு சர்வேக்களில் பங்கெடுத்தால்தான் டவுன்லோட் செய்யும் பக்கம் வரும் என்று காண்பிக்கும். இந்த சர்வேக்காளில், நம் பெயர் முகவரி, இமெயில் ஐ.டி, போன் நம்பர் கேட்கப்படும். இதில், இறுதியாக நம் தகவல்களை வேறு இணையதளங்களுக்குப் பகிர நாம் ஒப்புக் கொள்வது போல செய்தி இருக்கும். இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகும் "Golden WhatsApp" எட்டாக் கனியாகவே இருக்கும். நாமே அலுத்துப் போய் விட்டுவிடுவோம். பிறகுதான் விளையாட்டே உள்ளது!

தேவையில்லாத கால்கள், மெயில்கள், மெசேஜ்கள் எனப் பலவும் நம்மைத் துரத்தும். மெயிலையோ, மெசேஜையோ திறந்தால் நம் கணினியையும், மொபைலையும் வைரஸ் தாக்கும். நம் அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதில் மிகவும் கொடுமையான விஷயம், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று பலபேருக்கும் இந்த தொல்லை நம்மால் ஏற்பட்டிருக்கும். நிம்மதியாக வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்தியவனை இப்படி பிரச்னையில் மாட்டி விட்ட "வாட்ஸ் ஆப்" பாவம் நம்மை சும்மா விடாது என்பதை நினைவில் கொள்ளவும்!

இப்படி செய்பவர்களுக்கு, ஒவ்வொரு Surveyக்கும் கமிஷன் கிடைக்கும். அதோடு இலவசமாக நமக்கு virus!

இதுதான் "WhatsApp Golden Version 4.0" வின் நிலை. யாரும் ஏமாந்துவிட வேண்டாம்.  வாட்ஸ் ஆப் என்ன அப்டேட் செய்தாலும், அது நமக்கு நம் playstoreல் மட்டுமே தகவலாக வரும். ஆகவே யாரும் நம்பி ஏமாற வேண்டாம். பத்து பத்து போட்டோவாகப் பொறுமையாக அனுப்புவது தவறில்லை. 100 போட்டோ அனுப்ப ஆசைப்பட்டு, மோசம் போய்விடாமல் இருத்தல் நன்று!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth