புலவர் இராம. வேதநாயகத்தின் கவி: தோல்விகண்டு..!
புலவர் இராம.
வேதநாயகத்தின்
கவி:
----------------- -------------
தோல்விகண்டு..!
-------------------------------
தோல்வி
கண்டு
துவளாதே
தோள்கள்
இருக்கு
கலங்காதே!
மாளும்
ஓர்நாள்
தீவினைகள்
மாண்பாய்
அன்று
மேலெழலாம்!
காலம்
ஒருநாள்
மாறிவிடும்
கவலை
எல்லாம்
ஓடிவிடும்!
ஞாலம்
போற்றும்
நன்னிலையே
நன்றாய்
எதிரில்
தோன்றிவிடும்!
பாடும்
தென்றல்
தனக்காக
பாடும்
பழக்கம்
உண்டோசொல்!
ஆடும்
மயிலும்
தனக்காக
ஆடும்
வழக்கம்
கண்டாயோ!
என்றும்
மாந்தர்
சிந்தையிலே
ஏற்றம்
பெற்றே
பதிந்திடுக!
பொன்றாப்
புகழும்
ஓர்நாளில்
பொன்னாய்
மிளிரும்
தயங்காதே!
----------- ---------------
Comments