வாங்க மரண மொக்கை போடலாம்

வாங்க மரண மொக்கை போடலாம் "   
""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.''
""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.''

""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?''
""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.''

""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?''
""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!''

""ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?''
""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!''

கேள்வி: Love marriage’கும் arranged marriage’கும் என்ன வித்தியாசம்???
பதில்: நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!, அப்படியில்லாம பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!!

ஒருவர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
இன்னொருவர்: யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
ஒருவர்: நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

ஒருவர்: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவிக் கொடுக்குறீங்க?
இன்னொருவர்: டாக்டர் தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

ஒருவர்: தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?
இன்னொருவர்: ஏன்?
ஒருவர்: டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

ஒருவர்: தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
இன்னொருவர்: இருய்யா.. எனக்கு ஒரு செருப்புத் தான் கிடைச்சிருக்கு...!

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

ஒருவர்: எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
இன்னொருவர்: என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
ஒருவர்: இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னொருவர்: இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

ஒருவர்: ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
இன்னொருவர்: இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

ஒருவர்: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகும் கூட ஆள் மாறவே இல்லைங்க.!
மற்றொருவர்: அப்படியா, பரவாயில்லையே ..!
ஒருவர்: அட நீங்கவேற., அவர் எனக்கு தர வேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் திருப்பி தரவேயில்லைன்னு சொல்லவந்தேன்.

ஒருவர்: உன்னுடைய மாத வருமானம் ரூபாய் 500-ன்னு உன்னோட ரேசன் கார்டுல போட்டிருக்கே அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய பங்களாவை உன்னால கட்ட முடிஞ்சது..?
மற்றொருவர்: இதெல்லாம் நான் என்னுடைய ‘நாள்’ வருமானத்தில கட்டினது..!

நீதிபதி: ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது நூறு ரூபாய் அபராதம் இரண்டில் எது வேண்டும் உனக்கு..?
குற்றவாளி: நூறு ரூபாய் கொடுங்க சாமி அது போதும்..!

மனைவி: என்னங்க இது., ஒருவாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்றீங்க..?
கணவன்: (கோபமாக) நீதானடி ‘டெய்லி’ காலண்டர் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னே..!

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth