நமஸ்காரம் கலியநம்பி ஸ்வாமி....
சபரி மாதா ஸ்ரீ மதங்க மஹரிஷியினுடைய சிஷ்யை...
அவர் சபரி மாதாவிற்கு தாரகமந்த்ரம் உபதேசம் செய்தார். அதை அவர்கள் குரு பக்தியுடனும், ச்ரத்தையுடனும் செய்ததன் பலன் ஸ்ரீ ராம தரிசனம்.. பிறகு அவர் சபரி தந்த உபசாரங்களை ஏற்று கொண்டார்....
ஜடாயு
சூரிய நாராயணனின் சாரதி அருணனுடைய குமாரர்...
ஆகையினால் அவருக்கு பிறப்பிலேயே சத்சங்க பலம் உண்டாயிற்று... ஜடாயுவினுடைய அண்ணா சம்பாதி அவர்கள் ஜடாயு ப்ராண த்யாஹம் செய்ததை அறிந்ததும் அவர் போய் ஜடாயுவிற்கு தர்பணம் முதலானவைகள் செய்கிறார்...
மேலே கோவிந்தண்ணா குறிப்பிட்ட வகையில் பகவானுக்காக ப்ராண த்யாஹம் செய்தவர்... உன் அப்பா தசரதரின் நண்பன் என்று சொல்லி தானும் உனக்கு அப்பா என்னையும் உன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியவர்...
பரம பக்தி உடையவர்....
குசேலர்
ஸ்ரீ சாந்திபனி என்னும் குருவிடம் வாசித்தார் க்ருஷ்ண பகவானுடன்..
ராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், கம்ஸந், ஹிரம்யகசிபு, மாரீசன் என்று
இவர்கள் அனைவருக்கும் பகவத் தரிசனம் கிடைத்தது...
ஆனால் முக்கியமான விஷயம் சத்சங்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...
ஒரு சங்கம் நம்மை நல்வழி படுத்த இருந்து விட்டாதானால் தாஸாமாவிரபு ஸௌரி: என்று பகவான் நம் முன்னாலே வந்து நிற்பான்...
லௌகீகமாக சொல்லவேண்டும் எனில் ஒரு தொகையை பாதுகாப்பில்லாத ஒரு இடத்தில் நாம் கொடுப்போமா???
அப்படித்தான் பகவான் தன்னை நேசிக்காத பாதுக்காக்காத ஒரு இடத்திற்கு வரவேண்டும் என்கிற நிர்பந்தம் ஏது?
நாம் நம்முடைய சம்பந்தமில்லாத ஒருவரிடம் வாங்கி சாப்பிடுவோமா?
வெளியில் போகும் போது யார் எதை கொடுத்தாலும் வாங்க கூடாது என்று நாம் நம் குழந்தைக்கு சொல்வதை போல தான் இதுவும்...
பகவான் எவ்வளவு ஒசத்தி அப்படின்னு தெரிஞ்சுக்க வேண்டாமா???
ஒசத்தியா இருக்கறவாளுக்கு ஒசத்தியா இருக்கறவா பண்ணினா தானே ரொம்ப நன்னா இருக்கும்...
நம்ம அம்மா சாதம் போடற்துக்கும்,
அதிதி யா ஒருத்தர் ஆத்துல போய் சாப்டற்துக்கும் வித்யாசம் இருக்கா இல்லையா???
பக்தியை காட்டிலும் ப்ரேமை முக்கியம்....
Comments