தெரிந்து கொள்ளுங்கள்.

🌺தெரிந்து கொள்ளுங்கள்.

🍎நான்கு வகை உயிரினங்கள்:
1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.
2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.
3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.
4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.

🍎ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:
1. கர்ணன்
2. காளந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு

🍎பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:
1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....

🍎ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [ பெண்களின் வயது எல்லையும் ஆண்களின் வயது எல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]
1. பலன்
2. மீளி
3. மறவோன்
4. திறவோன்
5. காளை
6. விடலை
7. முதுமகன்

🍎நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:
1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூலர்

🍎அஷ்ட பர்வதங்கள்:
1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை

🍎ஆத்ம குணங்கள்:
1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
6. உலோபத்தன்மையின்மை
7. மனமகிழ்வு
8. தூய்மை

🍎எண்வகை மங்கலங்கள்:
1. கண்ணாடி
2. கொடி
3. சாமரம்
4. நிறைகுடம்
5. விளக்கு
6. முரசு
7. ராஜசின்னம்
8. இணைக்கயல்

🍎எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:
1.சந்தனம்
2. கோட்டம்
3. கஸ்தூரி
4. கற்பூரம்
5. குங்குமம்
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர்

🍎ஏழுவகைப் பிறப்புக்கள்:
1.தேவர்
2. மனிதர்
3. விலங்குகள்
4. பறப்பவை
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம்

🍎ஈரேழு உலகங்கள்:
முதலில் மேல் உலகங்கள்:
பூமி
புவர்லோகம்
தபோலோகம்
சத்யலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்க்கலோகம்

அடுத்து கீழ் உலகங்கள்:
அதலம்
கிதலம்
சுதலம்
இரசாதலம்
தவாதலம்
மகாதலம்
பாதாலம்

🍎குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:
1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

🍎அஷ்ட ஐஸ்வர்யங்கள்:
1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்

🍎எண்வகை போகங்கள்:
1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)

🍎நவ நாகங்கள்:
1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3. அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

🍎நன்மை தரக்கூடிய தச தானங்கள்:
1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8. சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth