ஆன்மீக வினா விடை
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
1. புதுவை எனப்படும் திவ்யதேசம் எது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
2. திருப்பாவை அனுசந்திப்பதன் பயன் என்ன?
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவதே
3. திருப்பாவையில் குறிப்பிடுவன யாவை?
ஒரு கொடி - மாதவி
ஒரு குன்று - கோவர்த்தனம்
ஒரு நகர் - வடமதுரை
ஒரு தீவு - இலங்கை
ஒருத்தி - யசோதை/தேவகி
ஒரு விளையாட்டு பொருள் - கைப்பபந்து
4. மார்கழி திங்கள் என்று தொடங்கும் பாசுரம் எந்த பிரபந்தத்தில் உள்ளது?
திருப்பாவையில்
5. திருப்பாவையில் தொடக்க சொல் எது?
மார்கழி
6. ஆண்டாள் கண்ணனின் மேனியையும், கண்ணனையும், முகத்தையும் எவ்வாறு வர்ணிக்கிறாள்?
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
7. ஆண்டாள் வள்ளல் என்று குறிப்பிட்ட பாண்டிய நாட்டு திவ்யதேசப் பெருமாள் யார்?
திருமாலிருஞ்சோலை மணாளனார்
8. யார் யார் வந்திருந்து தன்னை மகட்பேசி மந்திரித்ததாக ஆண்டாள் கூறினாள்?
இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
9. கம்சன் யார்?
கண்ணனின் தாய்மாமன்
10. கோவிந்தா பொருள் கூறுக?
பசுக்களையும் அனைத்து உயிர்களையும் காப்பவன்
Comments