#நான்காவது_தூணின்_இலட்சணம்!!
மக்களை முட்டாள்களாக அடிமைகளாக, எதிர்பேச்சுப் பேசாத ஊமைகளாக, சிந்திக்கத் தெரியாத பிண்டங்களாக வைத்திருப்பதில் மதத்தை விட, மூட நம்பிக்கைகளை விட ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்பதே உண்மை.
உண்மைகளை வெளிக் கொணர்வதும், பொய்களை பொய்யாக்குவதும் தான் ஊடகங்களின் முதல் கடமை.
ஆனால் நம்முடைய ஊடகங்கள் பொய்யை மெய்யாக்குவதையும், உண்மைகளை மறைத்தும், திரித்தும் வெளியிடுவதையே முழு நேரப் பணியாக செய்து வருகின்றன. குறைந்தப் பட்ச சமூக அக்கறை கூட இவர்களுக்குக் கிடையாது.
#யார்_இவர்கள்?
தமிழகம் முழுவதும் வீடு, வீடாக பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதைப் பற்றி தலைப்பு செய்தி வெளியிடாதவர்கள்.
அது ஏதோ மிகச் சாதாரணமான விசயம் போலவும், தங்களுக்கு ஒன்றுமே தெரியாததுப் போலவும் நடந்து கொள்பவர்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண், மக்களின் துடிப்பு, உண்மையின் குரல்...!
ஊடகங்களுக்கு என்னவாயிற்று? ஏன் இந்த காதை செவிடாக்கும் அமைதி? ஏன் ஒரு வரி கூட எழுதவில்லை? நடுநிலை தொலைக்காட்சிகள் என்று பீற்றிக் கொள்ளும் தொலைக்காட்சிகள் ஒரே ஒரு கிராமத்தில் ஒரு இரவு தங்கினால் போதாதா? மக்களாட்சிக்கு இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்தும், இந்த ஊழல் கட்சிகளின் உண்மை சொரூபமும் வெளிவராதா.?
நடிகைகளின் குளியறைகளுக்குள்ளும், சாமியார்களின் படுக்கை அறைகளுக்கும் இரகசிய காமிராக்களை ஒளித்து வைத்துக் காசு பார்க்கும் இவர்களுக்கு கொஞ்சம் சமூக அக்கறை இருந்தால் போதுமே. தமிழகத்தின் எந்த மூலையில் காமிரா வைத்தாலும் இந்தத் திருடர்கள் சிக்குவார்களே. ஏன் செய்யவில்லை?
ஒரே காரணம் தான். இவர்களுக்கு பணம் தான் எல்லாம். இவர்களுக்கு சமூக அக்கறை கிடையாது. நாட்டுப் பற்றுக் கிடையாது. பணத்துக்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா? உண்மைகளை மறைப்பதா? ஊழலுக்கு துணைப் போவதா?
தமிழ் சமூகம் கரையேற ஒரே வழி மட்டுமே இருக்கிறது. தமிழ் சமூகம் எந்த தொலைக் காட்சியையும் பார்க்கக் கூடாது. எந்த பத்திரிக்கையையும், செய்தித் தாளையும் இலவசமாகக் கொடுத்தாலும் படிக்கக் கூடாது.!
Comments