மேனேஜருக்கு ஒரு பகிரங்க கடிதம்...

மேனேஜருக்கு ஒரு பகிரங்க கடிதம்...
மறுபடியும் March மாசம் வந்தாச்சு, Appraisal, Rating, Band, Bucket, Dependancy, One on one meeting பொடலங்கா, புண்ணாக்குன்னு மொத்த officeம் ரத்த பூமி ஆயிருக்கும்....
எப்படியும் நம்ம expect பன்ற Ratingக விட கம்மியா தான் வரும். அந்த வெறுப்புல அப்படியே போய் மேனேஜர்
கிட்ட discussion பண்ணிட்டு ரூம விட்டு வெளிய வந்த
கையோட ஒரு employee எழுதுற கடிதம்....
'Certification முடிச்சியா?, Competency முடிச்சியா?,
Companyக்குasset create பண்ணியா? Cross fuctional training attend பண்ணியா?? Training conduct பண்ணியா?? fun eventsல dance ஆடுனியா? கொஞ்சி விளையாடும் எங்கள் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயான்னு' கட்டபொம்மன்
rangeக்கு கேக்கறீங்களே ஒரு நாளைக்கு 9 hours
projectக்கு வேல பாத்தனே , அது உங்க கண்ணுக்கு
தெரியலையா??
எங்கயோ இருந்து codeஅ cut copy பண்ணி , நடுவுல
நடுவுல மானே தேனே பொன்மானே போட்டு paste
பண்ணியும் , MS Excel, MS Powerpointல கலர் கலரா படம் போட்டும் தான் மொத்த projecte ஓடிட்டு இருக்குன்னு தெரிஞ்சும், 'projectக்காக innovativeஆ என்ன பண்ணிருக்கன்னு' வாய் கூசாம கேக்கறீங்களே, MS
Excelலயும் Cut,copy pasteலயும் என்னய்யா innovation பண்ண
முடியும்??
முக்கியமா வேல இருந்தப்போ, உடம்பு சரி இல்லாம லீவ் போட்டுட்டா attitude சரி இல்லன்னு குதிக்கரீங்களே, Appraisal முடிஞ்சு எல்லாருக்கும் rating போட்டுட்டு அடுத்த ரெண்டு நாளைக்கு sick லீவ் போட்டுட்டு எஸ்
ஆகுரீங்களே , அப்ப உங்க attitude, latitude, longitude பத்தி எல்லாம் ஒரு நிமிஷமாவது நெனச்சு பாத்தீங்களா??
Ratingகும் போட்டுட்டு , " இது என்னோட சொந்த decision மட்டும் இல்ல, This decision is taken on discussing with 'Higher
Management' , Onsite counterpart and all stakeholders involved in the
project and incorporated with the process of curve fitting of the company's territorial legislation of the integration of the independant quarterly performance of the company and the customer satisfaction......"
அப்படி இப்படின்னு ஏதேதோ புரியாத terms சொல்லி ஏன்யா மழுப்புறீங்க??
Communication skills இன்னும் improve பண்ணனும், Analytical
abilityய sharpen பண்ணனும், Team work இன்னும் flexiblea
இருக்கணும், Interpersonal skills நல்லா காமிக்கணும், Pro activeness காது வழியா வழியனும்ன்னு சொல்றீங்களே,
இந்த வார்த்தைய எல்லாம் முன்ன பின்ன dictionaryல
பாத்தது உண்டா??
அப்படியே கம்மியா வேல செஞ்சிருந்தாலும் நல்ல rating போட்டா தான் என்ன?? 1947க்கு முன்னாடி
வெள்ளைக்காரன் ஏமாத்தி புடுங்கிட்டு போன காசுல
1 % காச software company திருப்பி அவங்க கிட்ட இருந்து ஏமாத்தி புடுங்கிட்டு இருக்காங்க, அப்படி புடுங்குன காசுல 1 % employeesக்கு சம்பளமா குடுக்கறாங்க , அந்த காசுல 1 % வருஷா வருஷம் incrementa தராங்க, அந்த
இத்துனூண்டு காச குடுக்கறதுக்கு , Fixed depositல Lakshmi vilas bankல போட்டு வெச்சிருக்கற சொந்த காச
குடுக்கற மாதிரி ஏன்யா feel பண்றீங்க??,
இத எல்லார்த்தையும் கூட பொறுத்துக்கலாம்,ஆனா
Discussion முடிஞ்ச அப்புறம், "நா உன் personal frienda
சொல்றேன், Lifeங்கறது ஒரு Slow cycling race, பாத்து நிதானமா தான்
ஓட்டனும், Lifeங்கறது ஒரு கபடி போட்டி, அடுத்தவன் கால வார்நாதான் மேல வர முடியும்...  Lifeங்கறது ஒரு Lifebuoy சோப்பு, .................. "
இப்படியெல்லாம் தயவு செஞ்சு கருத்து மட்டும்
சொல்லாதீங்க ப்ளீஸ்.......... படித்ததில் சிரித்தது....

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth