சென்னை நகர மக்களுக்கு என்னுடைய கேள்வி,,,,

தயவு செய்து முழுதும் படியுங்கள்,,,,

சென்னை நகர மக்களுக்கு என்னுடைய  கேள்வி,,,,

தமிழகத்திலேயே அதிக வசதிகளுடன் வாழ்கின்றவர்கள் சென்னை வாசிகளே,,, அதே போல் சமீபத்திய மழையில் அதிக கஷ்டங்களை அனுபவித்தவர்களும் நீங்கள் தான்,,,,

நீங்கள் தான் வாக்களிக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டும்,,, ஆனால் நீங்கள்???????

தமிழகத்தின் தலைநகரமாம் சிங்கார சென்னை,,,, எவ்வளவு வசதிகள்,,,

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்,

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை,

மிகப் பெரிய நூலகம்,

மின்சார ரயில்,

மிகப் பெரிய பாலங்கள்,

மிகப்பெரிய மால்கள்,

மிகப் பெரிய கோயம்பேடு மார்க்கெட்,

ஆடம்பர கேளிக்கை விடுதிகள், பார்கள்,

இன்னும் மாநிலத்தின் 80% மக்கள் கண்டும் கேட்டிராத அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் சென்னை வாசிகள் தான் இன்று தமிழத்தின் வாக்குப்பதிவில் மிகவும் குறைந்த பட்சமாக 57% மட்டும் வாக்களித்து உள்ளீர்கள்,,,,,

இதற்கு நீங்கள் வருத்தப்படக் கூடாது வெட்கப்பட வேண்டும்,,,,,

உங்களுக்கு ஆளும் கட்சி,இதுவரை ஆண்ட கட்சிகள் மீது கோபம் இருந்தால் இந்த முறை அந்த கட்சிகளுக்கு மாற்றாக பலர் களத்தில் உள்ளனர் அவர்களுக்கு வாய்ப்பு அளித்து உங்களது கடமையை செய்திருக்கலாமே?

எங்களை விட நீங்கள் தான் படிப்பறிவு மிக்கவர்கள்,,, ஆனால் சென்னை மாவட்ட ஆட்சியர் யார்  என்று கேட்டால் உங்களில் பலருக்கு தெரியாது?

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ள மாட்டர்கள் சென்னை வாசிகள் என்று நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்,,,,ஆனால் தமிழகத்தில்  என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நமக்கென்ன என சோம்பேறித்தனமாக வீட்டில் அமர்ந்து TV பார்த்துக் கொண்டு ஓய்வு எடுத்து இருக்கிறீர்கள்,,,, உங்களை என்ன வென்று திட்டுவது,,,,,

தமிழகத்தின்  அனைத்து பகுதி மக்களும் உங்களுக்கு உதவி செய்தனர் நீங்கள் மழை வெள்ளத்தில் உங்கள் வாழ்க்கையை இழந்த போது,,,,,,உங்களால் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று வாக்களிக்க இயலவில்லையா????????

நியாயப்படி பார்த்தால் அதிகம் கஷ்டப்பட்ட உங்களுக்கு தான் ஆட்சியாளர்கள் மீது அதிகம் கோவம் இருந்திருக்க வேண்டும்,,,,

ஆனால் சென்னை வாசிகள் யார் பற்றியும் கவலைபடாத சூடு சொரணை அற்றவர்கள் என்று எங்களுக்கு தெரியும் படி நடந்து கொண்டீர்கள்,,,,,

பல ஊர்களில் வாக்களிக்க துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்,,,,, ஆனால் நீங்கள்,,,,????

கடைசியாக,,,,

எங்களை பொறுத்தவரை இனி சென்னை என்றால் படித்த முட்டாள்கள் அதிகம் வாழும் பகுதி என்று தான் முதலில் நினைவுக்கு வரும்,,,,

கோவத்துடன் இந்த பதிவை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில்  இருந்து பதிவு செய்வது,,,,Gana.,,,, பின் குறிப்பு,,, எங்கள் தொகுதி தான் தமிழகத்திலேயே 88.5% வாக்குகள் பதிவு செய்து மாநிலத்தில்  முதல் இடம் பிடித்துள்ளோம் என்பதை உங்களுக்கு கூற கடமைபட்டுள்ளேன்,,,,

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth