உங்களுக்காகவே இது
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
யாரோ உங்களை புறக்கணித்து விட்டதாக நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள்.
யாரோ உங்களை ஒதுக்கி வைத்து விட்டதாக நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள்.
யாரும் உங்களுடைய அளவுக்கு பக்குவமாகவில்லை என்பதே உண்மை.
பகவத் க்ருபை உங்களுக்கு ப்ராப்தமாகியிருக்கும் நிலையில் உங்களை யார் புறக்கணித்தால் என்ன, வெறுத்து ஒதுக்கினால் என்ன?
அவன் உங்களை புறக்கணித்து விடுவதுமில்லை, ஒதுக்கிவிடுவதும் இல்லை...
அவனுக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை..
நீங்கள் தான் தேவையற்ற உறவுகளை நம்பி அவர்கள் மீது உங்களின் ஆசைகளை வைத்து ஏமாந்து போகிறீர்கள்..
ஏமாற்றம் தராதவனிடத்தில் தானே உங்கள் நம்பிக்கை இருக்க வேண்டும்..
அதை விடுத்து எங்கேயோ வைத்து விட்டு கஷ்டப்பட்டு வாழ்வதில் எந்த பயனும் இல்லை..
இஷ்டத்துக்கு கண்ணன் மேல் நம்பிக்கை வையுங்கள்..
அவன் நிச்சயம் உங்களை ஏமாற்றிவிட மாட்டான்..
நம்பீனோர் கெடுவதில்லை -கண்ணன்
நம்பினோரை விடுவதில்லை!!
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
தாஸன் ரமணபட்டாச்சார் ✍
Comments