மொத்ததுல அ.தி.மு.க
மொத்ததுல
அ.தி.மு.க ஜெயித்ததுக்கு காரணம் துட்டு!
தி.மு.க தோத்ததுக்கு காரணம் பிட்டு!
தே.மு.தி.க தோத்ததுக்கு காரணம் கூட்டு!
பா.ம.க தோற்றதுக்கு காரணம் நெட்டு!
சீமானுக்கும் ஆசை வரலாமா தின்பதற்கு லட்டு?
பா.ஜ.க விற்கும் விழுந்திருக்கிறது பலமான கொட்டு!
ஓட்டுப் போட்டவனெல்லாம் எங்கேயாவது போய் முட்டு!
சூரியனின் சூடு பட்டு, இலை போகவில்லை பட்டு!
அஞ்சாண்டுகளில் கழன்றுவிடும் தமிழனுக்கு நட்டு!
'எங்கே போகும் இந்த பாதை ' என்பதுதான் இதற்கு சரியான மெட்டு!
பாடிக் கொண்டே செல், கைகளில் ஏந்தி தட்டு!
இனி வாயை ஸ்டிக்கர் போட்டு ஒட்டு!
வேறென்ன செய்ய, உன் தலைவிதியை நீயே திட்டு!
Comments