தமிழ்நாட்டில் உள்ள ஒரு முட்டாளை பற்றிய செய்தி.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு முட்டாளை பற்றிய செய்தி. கார்கில் போர், கும்பகோணம் தீவிபத்து, ஆந்த்ரா புயல், ஒரிசா வெள்ளம், குஜராத் நிலநடுக்கம், தமிழகத்தின் சுனாமி இது போன்ற பேரிடர்கள் நடைபெற்ற காலம் 1996 முதல் 2006 வரை. இந்த பேரிழப்பின் நிவாரணத்திற்கு இந்த முட்டாள் தான் சுயமாக சம்பாதித்த பணத்தில் கொடுத்த தொகை மொத்தமாக ஒரு கோடிக்கும் மேல். அன்றைய காலத்தின் ஒரு கோடி, இன்றைய நூறு கோடிக்கு சமமானதே. (மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தெய்வங்களாகிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்த இழப்புக்கு தன் சொந்த பணத்திலுருந்து ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை).. 2002 ல் நெசவுதொழில் நழிவுற்ற போது நெசவாளர்கள் சாப்பாட்டிற்கே கஷ்டபட்ட போது நம் தெய்வங்கள் கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி வழங்கிய போது இந்த முட்டாள் நேரே சென்று பத்து லட்சட்த்திற்கு நெசவு துணி வாங்கிவிட்டு, இன்று நான் வாங்கியிருக்கேன், என்னை பார்த்து நிறைய பேர் வாங்க வருவாங்க, உங்க தொழில் முடங்கி விடாது என்று கூறினார். மேலும் இந்த முட்டாள் இலவச மருத்துவமனை கட்டி கடந்த 20 வருடங்களாக இலவச மருத்துவம் வழங்கி கொண்டிருக்கிறார். காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை. கை, கால் ஊனமுற்றவர்கள் இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை. தன்னோடு பணியாற்றிய 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு பென்சன் வழங்க ஏற்பாடு.  இது போன்ற செயல்களுக்காக இந்த பிழைக்க தெரியாத முட்டாளுக்கு அப்துல்கலாம் அவர்கள் கையால் சிறந்த குடிமகன் என்ற அவார்டு வழங்கபட்டது.  சென்னை வெள்ளத்தில் மக்கள் முதல்வர் முகத்தை பார்த்தாங்களோ இல்லையோ, இந்த ஆளு முகத்தை அனைவருமே பார்த்தனர். என்னங்க யாருனு தெரியலையா. இன்னைக்கு பேஸ்புக், வாட்ஸ் அப் ல இவரை தாங்க நம்ம கிண்டல் பண்ணிட்டு இருக்கோம். அவர் தாங்க விஜயகாந்த். நான் எனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் தான் சொல்லிருக்கேன். இதுபோன்று அவர் செய்த உதவி்கள் இன்னும் பல. அன்று அப்துல்கலாம் மறைவுக்கு இந்த நாடே வருந்தியது. அன்னைக்கும் இத்தனை மக்கள் இருக்காங்களேனு பார்க்காம இந்த ஆளு அழுததுல எவ்வளவு உண்மை இருந்ததுனு பார்த்த எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும். (அவரோட மறைவுக்கு கூட வராம உடல்நிலை சரியில்லைனு சொன்ன கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கும் இப்போ எப்படி ஓட்டு கேட்க வரப்ப உடம்பு சரியாச்சுனு தெரியல.) இது போன்ற தேச துரோக செயலுக்காக இந்த முட்டாளுக்கு நாம் அளித்து கொண்டிருக்கும் தண்டணைகள், இவருக்கு இப்போது வயது 60 ஐ தாண்டியது உடம்பில் தைராய்டு பிரச்சினை வேறு இருப்பதால் முகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது, அதனால் நாம் இவரை கோமாளி என்று அழைப்போம். தன் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் இறந்த அன்று தான் பங்கேற்ற மேடையில் பிரிவு தாங்காமல் அழுததால் திடீரென்று அழுகிறார், திடீரென்று சிரிக்கிறார் இவர் ஒரு மனநோயாளி என்போம். உடற்பிரச்சினை காரணமாக மருத்துவர்கள் குடிக்ககூடாது என்று கூறியதால் குடிப்பதை நிறுத்தினாலும் அவர் கால் எங்காவது தடுமாறினால் அவரை நாம் குடிகாரன் என்று அழைப்போம் உத்தமர்களே. எதுகை மோனையாக பேச தெரியாது, இப்போ தொண்டையில் டான்சில் பிரச்சினை வேறு, அதனால் உளறுகிறான் என்று கூறுவோம்.கூட்டணி பேசினால் பேரம் பேசுகிறான் என்போம், தனித்தே நிற்கிறேன் என்றால் குழப்பவாதி என்போம். ஊழல் கரை படியாத கட்சிகளோடு கூட்டணி வைத்தால் முட்டாள் என்போம். பணம் கொடுத்தால் எதையும் செய்யும் ஊடகங்கள் உன்னை பற்றி எதை சொன்னாலும் நாங்கள் அனைத்தையும் நம்புவோம். நீ பேசிய நிறைய மேடைகளில் உன் பேச்சை முடிக்கும் போது சொல்வாய், தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று. தமிழ் ஈழத்தின் போராளியின் மீது இருந்த பற்றினால் நீ பெற்ற மகனுக்கு பிரபாகரன் என பெயர் வைத்தாய். ஆனால் உன்னை நாங்கள் தெலுங்கன் என்றே சொல்லுவோம். நீ இயற்கை அழிவிற்கு சம்பாதித்த பணத்தில் நிவாரணம் வழங்கிருந்தாலும் சரி, நெசவு தொழிலாளர்களின் தொழிலை ஊக்குவித்து இருந்தாலும் சரி, நீ  நேர்மையானவனாக இருந்தாலும் சரி, நாங்க பேப்பர் ல இன்னைக்கு என்ன போடுரானோ அதைதான் நம்புவோம். உன்னை குடிகாரன், குழப்பவாதி, மனநோயாளி, முட்டாள் னு கிண்டல் பண்ண தான் செய்வோம், ஏனா நாங்க தமிழர்கள்.  கடைசியா ஒரு வேண்டுகோள்.
நீங்க அவருக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை. ஒரு நல்ல மனிதனை கிண்டல் பண்ணாதீங்க, பேப்பர்காரனுங்க எப்போ டா அந்த ஆளு சின்னதா தப்பு பண்ணுவாரு பெருசா போடலாம்னு சுத்தி கிட்டே இருக்கானுங்க. எவ்ளோ கேவலமானாலும் போடுவாங்க இன்னும் 30 நாட்களுக்கு. நல்லா கவனிச்சா உங்களுக்கே புரியும். இது வரை ஒரு வரி செய்தியா கூட போட்டது இல்லை. இப்போ தினமும் ஒரு முறையாவது தப்பானவருனு காட்ட போராடிட்டு இருக்காங்க. சில பேர் விஜயகாந்த் முதலமைச்சராக என்ன தகுதி இருக்குனு கேக்குறாங்க. அவங்க 2 பேரையும் விட விஜயகாந்த் நல்லவன் என்ற தகுதி இருக்கு. இலவசம் கொடுக்காம தனிமனித வருமானத்தை பெருக்கனும் னு சொன்ன தகுதி இருக்கு, நடிகர் சங்க தலைவரா இருந்தப்ப இவங்க 2பேர் மாதிரி பணத்தை திருடாம நேர்மையா இருந்தார்னு தகுதி இருக்கு. அடுத்தவன் வளர்த்த கட்சியில் நுழையாமல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 12 வருடமா நிர்வாகம் பண்ணி இன்னைக்கு கூட்டணிக்காக அனைத்து கட்சிகளையும் கெஞ்ச வைத்தவர் என்ற தகுதி இருக்கு. 1983ல் இருந்தே இலங்கை தமிழர்களுக்காக போராடியிருந்தாலும் இன்றுவரை அவர்களை வைத்து அரசியல் செய்யாத ஒரே அரசியல்வாதி என்ற தகுதி இருக்கு. பொய் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களையும், ஆணவம் மிகுந்த ஜெயலலிதா வையும் நேருக்கு நேர் எதிர்த்த ஆம்பளை என்ற தகுதி இருக்கு.,. விஜயகாந்த் நல்லவன்தான் என்று நினைக்கிறவன் மட்டும் எல்லாருக்கும் இதை Share பண்ணு. இல்லை னு நினைக்கிறன் வழக்கம் போல டீவி, மிக்ஸி, க்ரைண்டர் வாங்கிட்டு அவங்களுக்கே ஓட்டு போடு. கடைசியா ஒரு விஷயம் அன்று அவர் துப்பியது பணத்தை பெற்று கொண்டு ஜெயலலிதா விடம் கேள்வி கேட்க பயந்த ஊடகத்தை மட்டுமல்ல நன்றி மறந்த நம்மளையும் சேர்த்து தான்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth