பாண்டே:
தமிழர் தலைமையே மாற்றுன்னு நீங்க சொல்றீங்க. உங்கள் கருத்துப்படி கேரளாவை ஒரு மலையாளிதான் ஆளுகின்றார், ஆந்திராவை ஒரு தெலுங்கர்தான் ஆளுகிறார், கர்நாடகாவை ஒரு கன்னடன்தான் ஆளுகிறார். அப்படின்னா அங்கேயெல்லாம் தவறே, குற்றங்களே நடக்கல என்கிறீர்களா?
சீமான்:
தனிப்பட்ட மக்களிடையே நடக்கும் குற்றங்கள் உலகம் பூராவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், தான் சார்ந்த மக்களுக்கு என ஒரு பிரச்சனை எழப்போகிறது என்றால் அதை கன்னட முதலமைச்சரோ, ஆந்திர முதலமைச்சரோ, கேரள முதலமைச்சரோ தடுக்கிறார்களா இல்லையா?
பாண்டே: எப்படி சொல்றீங்க ?
சீமான்: தென் இந்தியாவில் அணு உலை எங்கே அமைக்கனுன்னு மத்திய அரசு முதலில் திட்டம் தீட்டியது?
பாண்டே: கேரளாவில்
சீமான்: ஏன் அங்க அணு உலையை அமைக்காமல் கூடங்குளத்தில் அமைத்தார்கள்? உங்ககிட்ட பதில் இருக்காது ..
கர்நாடகாவிலிருந்து ஆந்திராவிற்கு செல்லும் கெயில் எரிவாயு குழாய்கள் தமிழ்நாடு எல்லைவரை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டுவந்துவிட்டு, தமிழகத்திற்குள் வந்துசெல்லும்போது என் விவசாயியின் நிலத்தை பிளந்து குழாய் பதித்து ஆந்திராவிற்கு எரிவாயு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? இதற்கு நம்மை ஆளுகிற ஆண்ட அரசுகள் அனுமதி கொடுத்துவிட்டு இன்று மன்னிப்பு கேட்பதின் பிண்ணனி என்ன?
பாண்டே: ........ம்ம்ம் .....
சீமான்: இதே நான் அங்கே முதலமைச்சராக அமர்ந்திருந்தால், எங்கிட்ட மத்திய அரசு என் மாநிலத்தில் மீத்தேன் எடுக்கவும், கெயில் எரிவாயு குழாய்களை என் விவசாய நிலங்களில் கொண்டுசெல்லவும், ஆந்திரா காட்டில் இருபது பேரை சுட்டுக்கொல்லவும் வாயை திறந்திருக்குமா?
பாண்டே: கச்சத்தீவை மீட்ப்போம் என்று சொல்றீங்க, காவிரியில் தண்ணீர் கொண்டுவருவோம்னு சொல்றீங்க, முல்லைப் பெரியார் அணையில் 156 அடி தண்ணீர் பெருக்குவோம்னு சொல்றீங்க. இவை எல்லாவற்றிற்கும் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் இதை நீதிமன்றங்கள் வழியாகத்தான் அணுகி தீர்க்கமுடியும் என்கிற சூழல் மற்றும் இந்த பிரச்சனைகள் தீராத ஒன்றாக இருக்கின்ற சூழலில் நீங்க எப்படி இவற்றை மாற்றி வெல்வோம்னு நம்புறீங்க? அது எப்படி சாத்யம்?
சீமான்: அவன் நிலத்து வளங்கள் அவங்களுக்கு எப்படி உயர்வானதோ, அதேபோல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின்சாரம் எனக்கு, நரிமனம் பெட்ரோலியம் எனக்கு மட்டுமே சொந்தம் என்று நான் இறங்கினால் நீதிமன்ற கட்டளைகளை மதிக்காதவன் எங்கிட்ட ஓடி வருவானா இல்லையா?
அப்படியே நீதிமன்றம் தலையிட்டு இவையெல்லாம் தேசியமயம் என்று சொன்னால் நான் கேப்பென்ல; என்னோட நிலக்கரி மின்சாரம், நரிமனம் பெட்ரோல் எல்லாம் தேசியமயம் என்றால் கேரளாக்காரன் தண்ணி மட்டும் தனிமயமா?
பாண்டே : .......... !!!!!!!!!!!
Comments