The Purge என்றொரு ஆங்கில படம்

The Purge என்றொரு ஆங்கில படம் உண்டு. காவல்துறை இல்லா ஓர் இரவை பொதுமக்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை தத்ரூபமாக சொல்லியிருப்பார்கள். மாலை 07.00 மணி முதல் காலை 07.00 மணி வரை உதவிக்கு காவல்துறை வரமாட்டார்கள். தனது பாதுகாப்பை தானே உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த 12 மணிநேரத்தில் எந்த குற்றமும் வழக்காக பதிவு செய்யப்படாது. கொலை,கொள்ளை,கற்பழிப்பு என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அனைவருடைய தனிமனித வன்மமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. பழி,பகை,காமம்,குரோதம் ஏன்? ஒரு ஜாலிக்காக கூட கொலையையும் கற்பழிப்பையும் அரங்கேற்றுகிறார்கள் மக்கள். தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல் உடலில் வலுவும், அதிர்ஷ்டமும் உள்ளவர்கள் மட்டுமே தப்பி பிழைக்கிறார்கள். காலை 07.00 மணிக்கு Purge முடிவடைகிறது. வீதியெங்கும் லாரிகளில் பிணங்களை அள்ளுகிறார்கள். தப்பி பிழைத்தவர்கள் மரண பயத்தை பரிசாகவும் உறவினர்களின் பிரேதத்தை இலவசமாகவும் பெறுகிறார்கள். படம் பார்க்கும் நமக்கும் மரணபயம் லேசாக உணரப்படுகிறது. இரவு பகல் பாராமல் உழைக்கும் பாதுகாப்பு பணியாளர்களின் மீதுள்ள மதிப்பும் கணிசமாக உயர்கிறது. காவல் துறையினரின் பணி சொல்லால் விவரிக்க இயலாதது. எனவே கண்ணியம் காப்போம்.. காவல்துறையை மதிப்போம்..

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth