அப்பா

அப்பா...

1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.

3. குழந்தைகளின் வரவிற்கு பிறகு, அவர்களின் நலனுக்காக
எப்படிப்பட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.

4.பிள்ளைகளின் இன்றையத் தேவைகளை விட, வருங்காலத் தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு, அதற்காகத் தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் படைத்தவர்.

5. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர்.

6. தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து, சம்பாதித்து பணம் அனுப்பி, வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை
சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர்.

7. மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் வரை ATM ஆக இருப்பவர்...

8. கடைசி காலத்தில் பிள்ளைகளால்  உதாசீனப்படுத்தப்பட்டாலும், அவர்களின் நல்வாழ்விற்கு ஆசைப்படுபவர்.....

அப்பா.....👨🏻
Happy father's day!!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth