புத்தரின் உயர் உண்மைகள்
"புத்தரின் *உயர் உண்மைகள்*..."🙏🏻
புத்தர், அவர் தன்னை கடவுளாக எங்குமே சொல்லவில்லை...
அவரின் சமுதாய சிந்தனை மற்றும் சீர்திருத்த எண்ணம் தான் அவரை மக்களை விட்டும் தனிமை படுத்தியது...
ஏறக்குறைய முஹம்மது நபி அவர்கள், மக்களின் அனாசார விஷயங்களை விட்டும் குகையில் தனிமையில் ஒதுங்கியது போன்று...
இருவருக்கும் ஏறக்குறைய ஒரு ஒற்றுமை உண்டு இருவரும் மக்களின் தீய செயலைதடுக்க முடியாமல் தான் தனிமையில் ஒதுங்கினார்கள்...
பிறகு தான் முஹம்மது நபிக்கும் ஞானம் கிடைத்து...
அதே போன்று புத்தருக்கும் ஞானம் கிடைத்தது...
புத்தரின் முக்கியமான போதனைகளில் 4 போதனைகளை
புத்த மதம் சொல்லுகிறது...
இதனை 'உயர் உண்மைகள்' என்று புத்த மத மக்கள் அழைகின்றனர்.
1 வது...
மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
2 வது...
அந்த துன்பத்திற்கு காரணம் தன்னலமும் ஆசையும் தான்.
3 வது...
மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
4 வது...
மனிதன் தன்னலம் ஆசையில் இருந்து தப்பிக்க எட்டு வகையான பாதை உண்டு.
அது...
1. நேர்மையான கருத்து.
2. நேர்மையான எண்ணம்.
3. நேர்மையான பேச்சு.
4. நேர்மையான செயல்
5. நேர்மையான வாழ்க்கை.
6. நேர்மையான முயற்சி.
7. நேர்மையான சித்தம்.
8. நேர்மையான தியானம்.
இது தான் அந்த 8 பாதை...
அவர் 'என்னை வணங்குங்கள்...
அதுவே சிறந்தது...' என்று புத்தர் கூறவில்லை...
ஆனால் புத்தர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் மேற்கொண்டார்...
அதே போன்று மனிதன் தன்னலம் மற்றும் ஆசையில் இருந்து தப்பிக்க காட்டிய 8 வகையான பாதையின் இறுதியில் தியானத்தை வலியுறுத்துகிறார்.
யாரை நினைத்து தியானம்?
கடவுளை...
அனைத்தையும் 'கட'ந்து நம்'உள்' இருக்கும் தெய்வ தன்மையை உணர தியானம் செய்ய வேண்டும் என்கிறார்...
'தெய்வ தன்மை' என்பது ஒன்று தான்...
அவற்றின் பெயர்கள் தான் இடத்திற்கு தக்க...
மக்களுக்கு தக்க...
சிவன்,
அல்லா,
கர்த்தர் என மாறுபடுகிறது.
ஒருவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் நபர் மாறிவிட போவதில்லை...
தெய்வ தன்மையை எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் தெய்வம் மாறி விட போவதில்லை...
இந்த,
உண்மையை உணர்ந்தால் மட்டுமே...
கடவுளை உணர முடியும்.🙏🏻
கடவுளை உணர்ந்தால் மட்டுமே...
இவ்வுலகை உணர முடியும்.🍁
இவ்வுலகை உணர்ந்தால் மட்டுமே...
நம் வாழ்க்கையை வாழ முடியும்.💐
ஓம் நமசிவாய...🙏🏻
ஓம் முருகா...🙏🏻
அல்லாஹ் அக்பர்...🙏🏻
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...🙏🏻
💐💐💐💐💐💐💐💐
Comments