அறிந்துகொள்வோமே?

அறிந்துகொள்வோமே?
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்களில் நந்தனும் ஒருவர் ....
சோழ மண்டல ஆதனூரை சேர்ந்தவர் ..தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
.40 வேலி நிலத்துக்கு சொந்தமான ஒரு பிராமண
நில ச்சுவான் தாரிடம் வேலை பார்த்து வந்தார் .
.நந்தன் கடின உழைப்பாளியாக இருந்ததால் அவர் நந்தனை பொன்முட்டையிடும் வாத்தாக பாவித்து வந்தார்...
நந்தன் சிவ பக்தன்....அருகிலுள்ள திருப்பன்கூரில் உள்ள சிவாலயத்துக்கு சென்றார்...
அவர் தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என கூறி உள்ளே அனுமதிக்கவில்லை ...
அதனால் அவர் வாசலிலேயே இருந்து தரிசிக்க விரும்பினார்...
ஆலயத்துக்குள் வைக்கப்பட்டிருந்த கடவுள் சிலையை தரிசிக்க தடையாக குறுக்கே நந்தி இருந்தது...அவர் இறைவனை வேண்ட..
அந்த நந்தி விலகி அவரை கடவுளை தரிசிக்க செய்தது...
பிறகு ஒருநாள் நந்தன் , சிதம்பரத்தில் உள்ள ஆலயத்துக்கு செல்ல அனுமதி கோரினார்..
அந்த முதலாளி பிராமணனோ அனுமதிக்கவில்லை..
ஆனாலும் தொடர்ந்து தன்னை அனுமதிக்க நச்சரித்து வந்தான்...
மறுநாள் திருநாள் என்னும்போது அந்த பிராமணன் நந்தனுக்கு ஒரு நிபந்தனையோடு சிதம்பரம் செல்ல அனுமதித்தான்..,
அந்த 40 வேலி நிலத்தையும் விளைவித்து அறுவடை செய்துவிட்டு செல்லலாம் என்பதே அந்த நிபந்தனை ...
ஒரே நாளுக்குள் நிலத்தை விளைவித்து...அறுவடையும் செய்வது என்பது கனவிலும் நடவாத காரியம் என்பதால் ,அவன் கடவுடளிடம் முறையிட்டு கதறி...உறங்க சென்றான்..
மறுநாள் காலை வயலுக்கு சென்றபோது வயலில் அறுவடை முடிந்திருப்பதை கண்டு பிரமித்து முதலாளியிடம் கூறினான்..
.அந்த பிராமணர் , கடவுளின் செயலை கண்டு நந்தனின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்....
சிதம்பரம் செல்ல அனுமதியும் கிடைக்க , சிதம்பரம் சென்ற நந்தனை ..தாழ்த்தப்பட்டவர் என்பதால்,கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை..
அவனோ அந்த இடத்தை விட்டு அகலாமல் அங்கேயே உறங்கினான்....
அந்த இரவில் கடவுள் அங்கேயிருந்த 3000 பிராமண அடியார்களுக்கும் கனவில் தோன்றி நந்தனை ஆலய மரியாதையோடு அனுமதிக்க உத்தரவிட அப்படியே ..மறுநாள் நந்தன் ஆலயத்துக்குள் ஆலய மரியாதையோடு அனுமதிக்கப்பட்டான்...
ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க கூடாது என்பது
ஆண் டவனின் கட்டளை அல்ல..பிராமண வீணர்களின் கட்டளையே....
கடவுள் ஏற்று கொண்ட சமூகத்தை ....ஏற்காத இந்த பிராமணர்களின் கூட்டத்தை மக்கள் ஏன் ஏற்கவேண்டும்?
கடவுளை விட இவர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்லவே?

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth