விதைக் கோட்டை
📚📕📖 விதைக் கோட்டை : நெல் அறுவடையானதும் 50 - கிலோ நெல்லைத் தனியாக எடுத்து சுத்தம் செய்து வைக்கோல் பிரி கொண்டு பந்து போல் உருட்டிய பின் உள்ளே நெல்லைக் கொட்டி மூடிவிடுவார்கள். பார்ப்பதற்கு உருண்டையாகப் பந்து போல் இருக்கும். இந்தக் கோட்டை மீது சாணத்தை மெழுகி வைத்து விடுவார்கள். ஓராண்டு கழித்து இந்த விதையை எடுத்து விதைத்தால் பக்குவப்பட்டு அத்தனை விதை கலும் அமோகமாக முளைத்து விடும்.
Comments