ஸ்ரீரங்கம் பெருமாள்
1)நடை என்றால் ஸ்ரீரங்கம். வடை என்றால் திருமலை திருப்பதி. குடை என்றால் பெருமாள் கோவில் காஞ்சிபுரம். முடி என்றால் திருநாராயணபுரம் என்ற பெருமைகள் மேற்கூறிய திவ்யதேசங்களுக்கு ஒவ்வொரு தனி சிறப்பாக இருந்தாலும் நடை வடை குடை முடி ஆகிய நான்கிலும் ஒரு சேர பெருமை மேன்மை பெற்றது திவ்யதேசத்தில் தலைமையான நம் திருவரங்கமே. நம் ஸ்ரீ நம்பெருமாளின் நடை அழகுயானது நம்பெருமாளை எழுந்தருளபண்ணும் ஸ்ரீ பாததாங்கிகள் மற்றும் வேதாள்கள் மற்றும் நடை தெரியாதவர்கள்(புதிதாக எழுந்தருளபண்ண வருபவர்கள் ) கூட ஸ்ரீ நம்பெருமாளை தோளில் தோளுக்கினியான் வாரையை தொட்டவுடனேயே தானே நடை வரும் படி செய்ய கூடியவர் எங்கள் தானை தலைவரான அரங்கன். ஸ்ரீ பாதம்தாங்கிகளை ஸ்ரீரங்க மண்ணே சிங்க நடை போட வைக்கும்.
2) வடைக்கு ஸ்ரீநம்பெருமாள் சாயங்காலம் ஷீரனண்ணாத்தில் அமுது செய்கிற கறுப்பு உளுந்து வடை,மற்றும் ஒவ்வொரு வாஹன வடை ,ஊஞ்சல் உத்சவ வடை, வசந்த உத்சவ வடை(அரிசிவடை) எனநம்பெருமாள் சூட்டோடு அமுது செய்கிற (பணியாரபோர்டு கைங்கர்ய பரர்கள் செய்கிற)வடை அதி அற்புதம்.
ஸ்ரீ பண்டாரத்தில் ஸ்ரீ நம்பெருமாள் அமுது செய்வதற்காக செய்யும் வடையும் பொது மக்களுக்காக வியாபாரத்திற்காக செய்யும் கறுப்பு உளுந்து வடை மொறுமொறுப்போடு ஸ்ரீ நம்பெருமாள் அமுது செய்த மிளகுயோடு புளியோதரை சாப்பிட்டால் பேரின்பம்.
3) ஸ்ரீ நம்பெருமாளின் இந்த தங்க திருமுற்றக்கொடைக்கு உலகில் ஈடு இனண எதுவும் இல்லைஎனலாம். நம் நம்பெருமாளுளின் தங்க திருமுற்ற குடையானது முத்தும், பவளமும்,தங்கத்திலான ஆலிலை (இலைவடிவத்தில்)கோர்க்கப்பட்டு மேல்புறம் (தாமரை பூவில் உள்ள மொட்டு போன்ற கீரிடமும் அதன்அருகில் சிறுசிறுதாமரைஇதழ்களும்,தாமரை பூவை கீழே கவிழ்த்து பிடித்தார்போல் திருமாலுக்கே உகப்பான திருகமலவடிவும்,பட்டு குஞ்சலமும் கண்ணுக்கு விருந்தாகும் நம்ஸ்ரீ நம்பெருமாளின் புறப்பாடுச் சமயங்களில் நடை போடும் போது , நம்பெருமாளின் திரு நடைக்கு ஏற்றவாறு தங்க திருமுற்ற குடை இசைந்து இசைந்து, பல புறம் சுழன்று சுழன்று இப்புறமும் அப்புறமும் ஆடி ஆடி நம் உள்ளத்தை கரைய வைக்கும். காஞ்சி குடை அழகை கண் இருந்தால் மட்டுமேசேவிக்க முடியும். ஆனால் நம் நம்பெருமாளின் திருமுற்ற குடையின் சளார் பிளார் என்ற ஓசையோ,கண்ணில்லாதவர்களும்(பக்தியில்லாதவர்களும்) ஸ்ரீ நம்பெருமாளின் புறப்பாட்டில் அன்வயிக்கும்படி ஆறாத இன்னிசையாய் காதில் ரீங்காரமிடும்.
4)முடிக்கு நம் நம்பெருமாளின் பாண்டியன் கொண்டையும் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகள் அரங்கனுக்கு சமர்ப்பித்த கீரீடங்களும் அத்யாசர்யமானவை.பிறப்பு என்று ஒன்று இருந்தால் ஸ்ரீரங்கத்தில் பிறந்து தினம் தினம் நம்பெருமாள் கண்களால் நடையை சேவித்து நம்பெருமாளின் வடையை நம் வாயால்ருசித்து நம்பெருமாள் குடை ஓசையை காதால் கேட்டு,கண்ணார கண்டு, பாண்டியன் கொண்டை அணிந்த திவ்ய தேசங்களின் தலைவனான ஸ்ரீநம்பெருமாளை சேவிக்க ,இம்ஸ்ரீ ரங்கத்தே இனியும் ஏழ்பிறப்பு பிறக்க பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் புத்திரர் கூரத்தாழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளை பிரார்த்திக்கிறேன்.நடையிலும்,வடையிலும்,கொடையிலும்,முடியிலும்நான்கிலும் மேன்மை உயர்வு பெற்றது திருவரங்கமே திருவரங்கமே திருவரங்கமே.நடையிலும் வடையிலும் கொடையிலும் முடியிலும் ஒருசேரபெருமைபெற்றவர் பராங்குச பரகால யதிவராதிகளின் தலைவர்மற்றும்அடியேன்ஆச்சர்யச ஸ்வாமிகளின் எஜமானரான ஸ்ரீநம்பெருமாளே ஸ்ரீநம்பெருமாளே ஸ்ரீநம்பெருமாளே...............
—
Comments