ஒரு மதுபான தயாரிப்பாளர் பேட்டி எடுக்கிறாங்க
.
*ஒரு மதுபான தயாரிப்பாளர் பேட்டி எடுக்கிறாங்க.....*
'வணக்கம் நேயர்களே.. இன்றைய பாருக்கு..பார்..நேருக்கு நேர் நிகழ்ச்சியில்.. மதுபான தயாரிப்பாளரும்..டாஸ்மாக் ஆலோசகர் பதவி தனக்கு தர வேண்டும்..என பல ஆண்டுகளாக தமிழக அரசை நச்சரித்து வரும்..
திரு. அஜய் புல்லையா.. அவர்கள் வந்து இருக்கிறார்கள்..! இனி அவருடன்..
'வணக்கம் சார்..!'
'வணக்கம் தம்பி..!'
'சார் இப்ப.. ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி வர்ற.. டாஸ்மாக் வருமானம்.. நீங்க அலோசகரா வந்தா இதை விட வருமானம்..அதிகரிக்குமா..?'
'என்ன தம்பி இதைப் போய் வருமானம்'னு சொல்றீங்க.. அவமானம்'னு சொல்லுங்க..!'
'சார் நீங்க சொல்றது.. புரியலையே..!'
'தம்பி..இது அள்ள..அள்ள குறையாத அட்சய பாத்திரம்..தம்பி..! 21 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம்.. ஜு.ஜு.பி..!
இது வருமானம் இல்ல அவமானம்..!'
'சார் நீங்க.. ஆலோசகரா வந்தா ஆண்டுக்கு எவ்வளவு.. வருமானம்
கிடைக்கும்..?'
'தம்பி எழுதி வச்சுக்கோங்க.. நான் வந்தா ஒரே வருஷத்தில 50 ஆயிரம் கோடி.. வருமானம் கிடைக்கும்..!'
'50 ஆயிரம் கோடியா..? எப்படி சார்..?'
*'அதுக்கு தான் தம்பி..5 அம்ச திட்டம் வச்சு இருக்கேன்..!'*
'சூப்பர் சார்.. எங்கே ஒவ்வொன்னா.. சொல்லுங்க..?'
*திட்டம் 1*
.. ரம்.. பிராந்தி..விஸ்கி.. இதெல்லாம் சாஷே பாக்கெட்ல.. அறிமுகம்..எப்பு
டி..?'
'சார் ஆரம்பமே கலக்கல்..! அப்புறம்..?
'இனி டாஸ்மாக் மட்டுமில்லாம.. மளிகை கடை.. பெட்டி கடையில கூட நம்ம பாக்கெட் கிடைக்கும்..!'
'ஆஹா சூப்பர்.. அப்ப பலசரக்கு கடையில கூட 'பலசரக்கு' கிடைக்கும்..! அப்படி தானே..?'
'கரெக்ட்டு தம்பி..! இதுக்கு விளம்பர வாசகம் கூட ரெடியா.. இருக்கு தம்பி..!'
'என்ன வாசகம் சார்.. சொல்லுங்க..?'
*பாக்கெட்டை..கடிங்க.. படார்'னு குடிங்க..! எப்புடி..?'*
'அருமை சார்..! அருமை..!'
*திட்டம் 2* குடிக்கிறவங்க..ஒரு SMS பண்ணா போதும்..! உடனே சரக்கு டோர் டெலிவரி..! ஆகும்..!'
'போங்க சார்.. இதுல ஒரு ரிஸ்க் இருக்கு..! சார் போதைல இருக்கிறவன்.. சரக்கு பத்தலைனா..
எப்படி சார் SMS நம்பர ஞாபகம் வச்சுக்குவான்..? இந்த திட்டம் சுமார் தான்..!'
'தம்பி இவ்வளவு யோசிச்சவன்.. அத யோசிக்காம இருப்பேனா..? எந்த போதையிலும் மறக்காத நம்பர்.. குடிகாரங்களுக்கு பழகிய நம்பர்..
*-சிக்ஸ்டி...நைன்டி.. அதாவது 6090க்கு SMS..! யாரு மறப்பா..?'*
'சார் நான் சி.எம் ஆனா இப்பவே.. பதவி தந்துயிருப்பேன்..! சூப்பரோ சூப்பர்..!'
*திட்டம் 3* இனி டாஸ்மாக்கை தேடி மக்கள் போக வேண்டாம்..மக்கள
ை தேடி டாஸ்மாக் வரும்..!'
'புரியலையே சார்..?'
'தம்பி மொபைல் கோர்ட்.. மொபைல் ஹோட்டல்..மாதிரி மொபைல் பார்..!
எப்புடி..?'
'சார் நீங்க கட்சி ஆரம்பிச்சா.. சாகுற வரைக்கும் நீங்க தான் முதல்வர்..!
சூப்பர் திட்டம் சார்..!'
'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு..தம்பி..!'
'என்ன சார் அது..? சொல்லுங்க..?'
*நாங்க நடமாடுகிறோம்.. நீங்க நடனமாடுங்க*
..! நல்லா இருக்கா தம்பி..?'
'ஆஹா.. சார் பூரா பயலுகளையும் ஆட விட்டு காசை அள்ளுறிங்க போங்க..! அருமை..!'
*திட்டம் 4* சரக்கு வெண்டிங் மிஷின்..!'
'அப்படி'னா என்ன சார்..?'
'தம்பி பெரிய.. பெரிய மால்..! தியேட்டர்.. இங்கெல்லாம் போனா.. பெப்ஸி.. கோக்.. காசு போட்டா வரும் பார்த்து இருக்கியலா..?'
'ஆமா சார்..!'
'அதே மாதிரி காசு போட்டா சரியான மிக்சிங்'ல..பெப்ஸியோட சரக்கு வரும்..! அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா.. மெஷின் செலவு அவனது..!' எப்புடி..??
'சார் நீங்க எங்கேயோ போய்டிங்க..!
அருமையான திட்டம் சார்..!'
'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு தம்பி..!'
'என்ன சார் அது..?
*துட்டை போடுங்க.. மட்டை ஆகுங்க*.
'பொருத்தமான வாசகம் சார்..!'
*'திட்டம் 5*ஏழை எளியவர்களுக்கு.. ரேஷன் கடைல.. மாதம் இரு முறை மானிய விலையில் குவாட்டர் வழங்கும் திட்டம்..! எப்புடி தம்பி..?'
'சூப்பரோ சூப்பர்..! கண்டிப்பா நீங்க வந்தா ஓரே ஆண்டுல 50 ஆயிரம் கோடிய அள்ளி விடுவிங்க..!! ரொம்ப நன்றி சார்..! வணக்கம்..!
👍 👍 👏 👏 👌 👌 😃 😃
Comments