மகாபாரதம் இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா..! இது. என் மனதை தொட்ட ஒருவரின் பதிவு
#மகாபாரதம் இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா..! இது. என் மனதை தொட்ட ஒருவரின் பதிவு பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். ‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’ பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன. அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், “உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது. “குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடி...