Posts

Showing posts from May, 2014

சித்த மருத்துவம்.....

Image
அனைவருக்கும் இதை பகிரவும் சித்த மருத்துவம்..... கடிகளைக் கண்டறிதல்... இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்...... இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்... வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்... கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்... தேள் கடி மருந்துகள்:- எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வ