Posts

Showing posts from May, 2015

படித்ததில் பிடித்தது

ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல! அம்மா ஆசையா போட்ட செயினும் மாமா முறையா போட்ட மோதிரமும் Fees கட்ட முடியாத நண்பனுக்காக அடகு கடை படியேற அழுததில்ல... சட்டைய மாத்தி போட்டுக்குவோம் சாதி சமயம் பாத்ததில்ல, மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும் முகவரி என்னன்னு கேட்டதில்ல! படிச்சாலும் படிக்கலன்னாலும் பிரிச்சி வச்சி பாத்ததில்ல... அரி

A Funny Case Of A Kiss And A Slap

💋 - A Project Manager, His team member, An Old Woman And Her Young Daughter Are Travelling In A Train And During The Course Of Time, Get Themselves Introduced To Each Other And Become Temporary Friends... The Train Goes Through A Tunnel And It Gets Completely Dark... Suddenly, There Is A Kissing Sound And Then A Slap !!! The Train Comes Out Of The Tunnel... The Women And The Assistant Are Sitting There, Looking Perplexed... The Manager Is Bending Over, Holding His Face, Which Is Red From An Apparent Slap. All Of Them Remain Diplomatic And Nobody Says Anything... The Old Woman Is Thinking : These Managers Are All Crazy After Girls. He Must Have Kissed My Daughter In The Tunnel. Very Proper That She Slapped Him... The Young Girl Is Thinking : The Manager Must Have Tried To Kiss Me But Kissed My Mother Instead And Got Slapped... The Manager Is Thinking : Damn It... My junior Must Have Kissed The Young Girl. She Might Have Thought It   Was Me And Slapped Me... Now Guess Wh

இரவு 12 மணி

இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள் நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது, என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது, தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்! இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்! வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது..

. அந்த கடை வாசலில் கடையின் விதிமுறை போர்டு இருந்தது. அதில் எழுதியிருந்தது.. . 1.கடைக்கு ஒரு தடவைதான் வரலாம். . 2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கு... ஒவ்வொரு தளத்திலும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். . 3.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது.. அப்படியே வெளியேதான் போக முடியும்.. . இதெல்லாம் படிச்சுட்டு ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.. . "பச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன... ச்சேச்சே அப்படி எல்லாம் இருக்காது" . முதல் தளம் அறிக்கை பலகையில், . "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" . இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றாங்க.. . இரண்டாம் தளம் அறிக்கை பலகையில், . "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " . இதுவும் அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறாங்க.. . ம

Funny girl

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது

ஆள பிறந்தவனே ஓடிவா...!

பொய் சொல்லி தப்பிக்காதே உண்மையை சொல்லி மாட்டிக்கொள் பொய் வாழ விடாது உண்மை சாக விடாது                                             - விவேகானந்தர் இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு                                                   -விவேகானந்தர் தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான் உலகை அறிந்தவன் கோவ பட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான்                                             -பகவத் கீதை யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு சமயம் நீ  மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்                                                                                              -கண்ணதாசன் வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை                                                                 - A .P . J . அப்துல்கலாம் ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்பது எப்படி என்று யோசித்து பார் நீ ஜெயித்து

ரயிலில் கிடைத்த பாடம்...பளார் பதிவு...

சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம். படியுங்கள்… நமது எதிர்மறை எண்ணங்களுக்கு இந்த பதிவு விடையாக அமைந்தால் நல்லதே... கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்