Posts

Showing posts from November, 2015

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்ப தாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..! சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! 🔵கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..? பதில்;- அவரது கடைசி போரில்..! 🔵கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான.. பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட ்டது..? பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..! 🔵கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்.. வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..? பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!   🔵கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய காரணம் என்ன..? பதில்;- திருமணம் தான்..! 🔵கேள்வி;- இரவு- பகல்.. எவ்வாறு ஏற்படுகிறது..? பதில்;- கிழக்கே உதித்த சூரியன்.. மேற்கில் மறைவதாலும்.. மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்.. உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..! 🔵கேள்வி;- மகாத்மா காந்தி.. எப்போது பிறந

GOOD MOTIVATION இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நா

சர்க்கரை வியாதி.. கார்போரேட் சதி!

சர்க்கரை வியாதி.. கார்போரேட் சதி! “என்னடே முருகா… வியர்க்க விருவிருப்பாய் பரபரப்பா எங்க போய்ட்டு வர்ற…” “இந்த குசும்புதானே வேண்டாங்கறது… வாக்கிங் போய்ட்டு வர்றேண்ணே…” “ஏய்… நல்லாதானே இருக்க…” “30 வயசு ஆகுதுண்ணே.. டாக்டர் இப்பவே வாக்கிங் போங்க, அப்போதான் சுகர்லருந்து தப்பிக்கலாம்னு சொல்லுதாரு.. அதான் இப்படி. அதுசரி அய்யாசாமியண்ணே… உங்களுக்குத்தான், 40 வயசு ஆகப்போகுதுல்ல… நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட வேண்டியதுதானே… பேசிட்டே நடந்த மாதிரியும் ஆச்சு, நாலு விஷயம் பேசினதுமாதிரியும் ஆச்சு…’ “வீட்ல இருக்கிற மிஷின் பார்க்குற வேலைய மனுஷன் பார்க்க ஆரம்பிச்சாலே… இப்படி நாய்க்கு பயந்து ஓடி வர்ற மாதிரி இப்படி வாக்கிங் போகிற அவசியம் இருக்காது… ஏண்டே உங்க தாத்தா, எங்க தாத்தால்லாம் வாக்கிங் போயாடே 85 வயசு வரைக்கும் இருந்தாங்க…” “ஏண்ணே… அந்தக்காலமும் இந்தக் காலமும் ஒண்ணாண்ணே..” “ஒண்ணுதாண்டே… நானும் பார்த்துட்டு இருக்கேன்… ஊருல ரோம்ப பய இப்படித்தான் பேசிட்டு திரியீதிங்க… என் பாட்டன், பூட்டன் காலத்துல இருந்த அதே சூரியனும், நிலாவும்தான் என் காலத்துலேயும் இருக்கு, என் பேரன் காலத்திலேயும் இருக்கும்… இ

Funny cycle

Image

A child's wish (A small story)

A child's wish (A small story) ========================= A Primary School teacher asks her pupils to write an essay "what wish do you want from God?" At the end of the day, the teacher collects all the essays given by her pupils. She takes them to her house, sits and marking them. while marking the essays, the teacher sees a strange essay written by one of her pupils. That essay made her very emotional. Her husband comes and sits beside her and saw her crying. The husband asked her wife "What happened?" . She answered "Read this. It is one of my pupil's essay." "Oh God, Make me into a Television. I want to live like the TV in my house. . In my house, the TV is very valuable. All of my family members sit around it. They are very interested in it. When the TV is talking, my parents listen to it happily and calmly. They dont shout at the TV. They dont quarrel with the TV. They dont slap at the TV. So I want to b

Hierarchy

Image

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.

Image
மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார். மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப் பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சி களிடமும் இந்த வி­ஷயம் சென்று இருக்கிறது. ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை. வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார். அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது

பீதியை கிளப்ப வேண்டாம். ஆனால்...

பீதியை கிளப்ப வேண்டாம். ஆனால்... ----------------------------------------------------------- அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே கடல் பரப்பில் காற்று அழுத்தம் உருவாகி இருக்கிறது. இது நாளை இரண்டாக பிரியும். ஒன்று இலங்கை நோக்கி நகரும். மற்றது தமிழகத்தை நோக்கி வரும். தமிழகம் நோக்கி வட மேற்காக நகரும் காற்று அழுத்த மண்டலமும், இலங்கை நோக்கி தென் மேற்காக செல்லும் கா. அ. மண்டலமும் அரை வட்டமிட்டு மீண்டும் ஒன்றாக சேரும். அப்போது அது அநேகமாக சென்னை அருகில் கடலில் நிலை கொள்ளும். சுற்றுப் பயணம் செய்ததால் இரு மண்டலங்களின் அழுத்தமும் அதிகமாகி இருக்கும். அப்படி வலுவான ஒருங்கிணைந்த மண்டலம் சென்னை அருகே நிலை கொள்ளும்போது சென்னையிலும் வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் காற்றும் மழையும் பலமாக இருக்கும். பின்னர் இது மீண்டும் இரண்டாக பிரிந்து, ஒன்று வடக்கு வட கிழக்கு திசையில் ஆந்திரா ஒடிசா கடலோரத்தை தேடி பயணம் தொடங்கும். ஆனால் இரண்டாவது பிரிவு, அதாவது எஞ்சியுள்ள அழுத்த மண்டலம் எங்கேயும் நகராமல் சென்னையை நோக்கியபடி அப்படியே உட்கார்ந்திருக்கும். அந்த அழுத்த மண்டலம் எத்தனை நாள் சென்னை அருகே முகாமிடும் என்பதை உ

வாணி ராணி தொடர்ல மட்டும் தினமும் 'தொடரும்' போடும்போது ஏன் ராதிகா மேடமே வராங்க?

வாணி ராணி தொடர்ல மட்டும் தினமும் 'தொடரும்' போடும்போது ஏன் ராதிகா மேடமே வராங்க?

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள் - ஹஸன் பஷரி, உளவியல் ஆலோசகர்

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள் - ஹஸன் பஷரி, உளவியல் ஆலோசகர் 1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து  அவர்களை தொட்டு எழுப்பாட்டுங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுருசுருப்புடனும் எழும்புவதற்கு துணை புரியும். 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் அவர்களை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள். 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும். 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடாவி