Posts

Showing posts from May, 2021

பிரபத்தி

_*சிந்தனைச் சிதறல் 31-05-2021*_ 💞💞💞💞💞🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀               _*பிரபத்தி*_            ✍️✍️✍️✍️ உலகத்தில் நாற்பது வயது வரை திட்டமாக வாழ்ந்து, பிறகு கெடத் துவங்கியவா் பலா் உண்டு. அவா்கள் என்னதான் ஆட்டமாடினாலும், அவா்கள் உடம்பு அதற்கு இடங் கொடுக்கிறது. நானோ பதினான்கு வயதிலேயே வாழத் தொடங்கியவன். ஆயிரம் கண்களால் உலகத்தைக் காணத் தொடங்கியவன். உலகத்தை ஆனந்த பவனமாக, துன்ப நீா்க் குளமாக, ஆா்ப்பாட்ட மேடையாக, ஆரவார மைதானமாகப் பல வகைகளில் பாா்த்தவன். இந்தக் கண்கள் காணாத காட்சி இல்லை. இந்தக் கரங்கள் தீண்டாத அழகில்லை. இந்த மேனியில் படாத மென்மை இல்லை. இந்த உடம்பு அணியாத ஆடை இல்லை. இவனது அரசியல் காணாத தலைவா்கள் இல்லை. இவன் நுழையாத கட்சி இல்லை. காபரே நடனத்தில் இருந்து, கதகளி நடனம் வரை ஆடவும் பயின்றிருக்கிறான்; சபையிலே பாடவும் பயின்றிருக்கிறான். எல்லாத் துறைகளிலும் நுழைந்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதே இவனது குறிக்கோளாக இருந்தது. _*"எதிலே இவன் முழுமை பெற்றான்"*_ என்பதை எதிா் காலமே கவனிக்க வேண்டும். இது, ஆற்றின

உடல் எடை கூட, மலச்சிக்கல் தீர என பல நன்மைகள் தரும் பனங்கிழங்கு

*.* *பனை மரத்தை தான் நாம் கற்பக விருட்சம் என்று சொல்லுவோம். இந்த மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்துமே பயன்தரக்கூடிய ஒன்றுதான். அதே போல் நுங்கு, கல், பதநீர், பனங்கிழங்கு என இதிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே நமக்கு உடலின் ஆரோக்கியத்திற்குப் பலன் தரக்கூடியது தான்.* *ஆனால், இவ்வளவு சிறப்புகள் நிறைந்திருக்கும் இந்த மரத்தின் அருமை தெரியாமல் இதை அழித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவுகள் மனிதர்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது.* *பனங்காயை வெட்டாமல் மரத்தில் விட்டால், அது நன்றாக பழுத்துவிடும். இந்த பழத்தை தரையில் ஒரு குழி தோண்டி அதில் புதைத்தால், அதிலிருந்து கிடைப்பதுதான் பனங்கிழங்கு.* *மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட மக்கள் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் தவித்து வருவார்கள். அது போன்ற சிக்கலை எதிர்கொண்டால் வெயிலில் காயவைத்த பனங்கிழங்கை பச்சையாக எடுத்து, அவற்றை போதுமான தண்ணீரில் மாவாக அரைத்து, தோசை சுட்டு சாப்பிட்டால், அது உடலில் குவிந்திருக்கும் மலத்தை எளிதில் வெளியேற்றி உடலைச் சுத்தப்படுத்தும் மற்றும் முழுமையான நிவாரணம் அளிக்கும்

உண்ணுவதற்கு முன் உரைப்போம் நன்றி

** சேற்றில் இறங்கி  விதை விதைத்து சிரமம் நூறு சந்தித்து, தரமாய் விளைச்சல் தான்செய்த, உயர்வான எங்கள் *விவசாயிக்கும்* ,  அறுக்கையிலும்,  அடித்து உதிர்க்கையிலும், அளந்து சாக்கில் அடைக்கையிலும், பல கை மாறியும், இச்சோற்றை பக்குவமாய்  நம் கையில் சேர்த்த *இறைவனுக்கும்* , நம்முடைய பசியென்னும் தீயை அணைக்க, தீக்குளித்த *விறகுகளுக்கும்* , நெருப்பின் மீது வைத்தும், வெறுப்பினைக் காட்டாது வெம்மையை பொறுத்துக்கொண்ட  *மண்பாணைக்கும்*, உணவாய் உருமாற உளையில் கொதித்த  *அரிசிகளுக்கும்* , பக்குவமாய் சமைத்து பாசமாய் பறிமாறும்  *மனைவிக்கும்* , உலக பசி தினமான இன்றுமுதல்,   உண்ணுவதற்கு முன் உரைப்போம் நன்றி!  *புனிதன்* 9840682682

ஒவ்வொறு வீடும் கொரோனா தடுப்பு மையமாக மாற நாம் செய்ய வேண்டிய மொத்த சித்த மருத்து தொகுப்பு

*NRK-CBE* *மருத்துவ முறைகள் !* --------------------------------------- கொரோனாவை வராமல் தடுக்கவும், கொரோனாவை குணப்படுத்துவும் மருத்துவ முறைகள்.  1. அக மருத்துவங்கள் - 10 2. புற மருத்துவங்கள் - 10 3. சுற்றுப்புற தூய்மை - 10 4. நோய் எதிர்ப்பு உணவுகள் - 5  5. எளிய பயிற்சிகள் - 3 6. அழகிய வாழ்வியல் முறை - 3 இந்த 41 வழிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா இல்லா தமிழகம் உருவாகும். கொரோனா இருப்பவர்களுக்கு குணமாகும், இல்லாதவர்களுக்கு வராது, நாளுக்குநாள் பரவுவது உடனடியாக தடுக்கப்படும். வாங்க இப்ப அக மருத்துவத்தில் எத்தனை மருந்துகள் உள்ளது ? எப்படி தயாரித்து பயன்படுத்துவது அதன் பலன்கள் என்று பார்ப்போம். *அக மருத்துவங்கள் !* -------------------------------------- 1. கேரள வைத்தியரின் கசாயம் 2. சித்த மருத்துவர் வீரபாபுவின் மூலிகை தேனீர் 3. கபசுரக்குடிநீர் 4. நிலவேம்பு குடிநீர் 5. Ph சமானி 6. அஸ்வகந்தி சூரணம் 7. தாளிசாதி சூரணம் 8. திரிகடுகு தேனீர் 9. ஆடாதோடை மணப்பாகு 10. இரு மூலிகை கசாயம் *குறிப்பு :* பத்து மருந்தும் ஒரே நேரத்தில் எடுக்க தேவை இல்லை, எடுக்கவும் கூடாது, வாரம் ஒரு மருந்து என 10 வாரம் கடைப்பி

CMCஐ உருவாக்கிய டாக்டர் ஐடா

*1877ம் ஆண்டு..!* *...............................* *நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பசி..பட்டினியால் இறப்பு 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவில்லாத  நிலை!!*  *அதனால், அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தன. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்!* *ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது.. ஐடா கதவை திறக்கிறாள்,ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள், உடனே வாங்க" என்று பதறுகிறார்..!* *ஐடாவோ, "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம்  இருங்க அவரை எழுப்புறேன்" என்கிறார்.* *"இல்லம்மா.. என் மனைவிக்கு 14 வயசுதான். நாங்க பிராமணாளுங்க, பெண்ணை கணவனல்லாத பிற ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.*  *கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா, நாங்கள்

கொரொனாவுக்கு விடுப்பு இல்லை

*ஒரு முக்கிய அறிவிப்பு* *#நாளை கொரொனாவுக்கு விடுப்பு இல்லை* அடுத்த ஒரு வாரத்திற்கு தீவிர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் நலனுக்காக நாளை ஒரு நாள் (23.05.2021) மட்டும் கடைகள் திறந்திருக்க நமது முதல்வர் அவர்கள் அனுமதி தந்துள்ளார்.  உடனே ஒரு வாரத்திற்குத் தேவையானதை வாங்க எல்லாரும் வீதிக்கு வந்தா, அதுவே பெருந்தொற்றா மாற வாய்ப்பு அதிகம். Please, உங்களை கெஞ்சிக் கேட்கிறோம். ஒரு வாரம் வீட்டில் இருக்கின்ற மளிகைப் பொருட்களை வைத்து நாட்களை நகர்த்த முயற்சி செய்யுங்க.... மிக மிக முக்கிய அவசியம் என்றால் மட்டுமே நாளை வெளியே போகவும்.  கறி, காய்கறி, மளிகை வாங்கி வீட்டில் நிரப்பிட்டா மட்டும் சந்தோஷம் கிடைச்சுடாது....அதைவிட *உங்களோட உயிர் முக்கியம்.* மீன், முட்டை, காய்கறி வாங்க போய், தெரியாம கொரொனாவை வாங்கிட்டு வந்துராதிங்க...  ஒருவரிமிருந்து பரவும் வைரஸின் நீர்த்திவலைகள் 8 மீட்டர் வரை காற்றில் மிதந்து வர முடியுமென ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக படிக்கிறோம். "நான் போன கடையில கூட்டமே இல்லைங்கன்னு சொல்லி பெருமைப் படாதீங்க...உங்களுக்கு முன்னாடி அந்த கடைக்குப் போனவரு உங்களுக்காக கொரொனாவை அந்த இ

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?

_*சிந்தனைச் சிதறல் 21-05-2021*_ 🌼🌼🌼🌼🌼🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ ஒரு தடவை டில்லிக்குப் போயிருந்த போது விமான நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவள் ஒரு வடநாட்டுப் பெண்; பேரழகி. நான் வந்த அதே விமானத்தில் அவள் பயணம் செய்தாள். _*"கம்பனைக் கூப்பிடுங்கள்,*_ _*சீதையைக் காண்பான்;"*_ _*கவிகாளி தாசன்என்றால்,*_ _*சகுந்தலை என்பான்."*_ குழந்தைகளிடத்தில் எனக்கு உயிா். எனது தாலாட்டுப் பாடல்கள் தாய்மாா்களோடு போட்டி போடுவது அதனால்தான். ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மணிக்கு மணி ஓடி ஓடி எழுதிய காலங்கள் அவை. என்ன உற்சாகம்! என்ன ஆனந்தம்! வசந்த காலம்! வசந்த காலம்! நிம்மதி இல்லாமல் எழுதிய பாடல்களையே நீங்கள் நிம்மதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீா்கள். ஒருவா் ஒரு படம் எடுப்பதாக இருந்தது. அதில் ஓா் ஊமைப் பெண். அவளுக்கு ஒரு குழந்தை   பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு, அவளது தங்கை தாலாட்டுப் பாடுகிறாள்: _*"தாய் பேச நினைப்ப தெல்லாம்*_ _*நீ பேச வேண்டும்*_ _*

காற்றில் கரையாத நினைவுகள் - வெ.இறையன்பு

அற்புதமாக ரசித்து எழுதி இருக்கிறார் நமது தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள்...... காற்றில் கரையாத நினைவுகள். திருமணம், வீடுகளில் நடந்த காலமொன்று இருந்தது. இல்லம் சிறிதாக இருந்தாலும் உள்ளம் பெரிதாக இருந்ததால் அது சாத்தியமானது.  ஊரே மூன்று நாட்களுக்கு முன்பு களை கட்டி விடும். அத்தனை வீடுகளின் அடுப்புகளும் அணைந்து விடும். கல்யாண வீட்டில் அவர்களுக்குச் சாப்பாடு. கலகலப்பும், கலாய்ப்பும் கிராமம் முழுவதும் கேட்கும்.  கூம்பு வடிவ ஒலிபெருக்கி ‘இங்கு விசேஷம்’ என்று அறிவிக்கும். மொத்தம் நான்கே பாடல்கள். திரும்பத் திரும்ப ஒலித்து கேட்பவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும். திருமணத்தன்று ‘மணமகளே மணமகளே வா வா’ பாடல் கட்டாயம் ஒலிப்பதுண்டு.  உணவுக்கு முன்பு உழைப்பைப் பகிர்கிற நடைமுறை. ஒருவர் காய் நறுக்க, இன்னொருவர் அரிசி களைய, மற்றொருவர் அப்பளம் பொரிக்க, சுடச்சுட சாப்பாடு தயாராகும்.  உணவு என்பது அறுசுவை அல்ல. அள்ளி ஊற்றும் குழம்பு, குளம் கட்டி அடிக்கும் சோறு, கொஞ்சம் பொரியல், தாராள ரசம், தாளித்த நீர்மோர் இவையே பெரும்பாலும் இருக்கும். ஆனால், அதற்குத் தான் அத்தனை ருசி! உறவு விசிறி... உன்னதத் தூக்கம்  ஊர்க்காரர்

பிடிச்சவங்க

புருசன் மொபைல நோண்டிக்கிட்டும். பொண்டாட்டி சீரியல் பாத்துக்கிட்டும் வீட்ல வெட்டியா பொழுது போக்கிட்டு இருக்காங்க. திடீர்னு மனைவிக்கு பளீர்னு ஒரு ஐடியா! ஏங்க எனக்கு போரடிக்குது அந்த மொபைல கொஞ்சம் கீழ வைங்க....." ஏண்டி எனக்கும் போரடிக்கணுமா...! அதில்லீங்க போரடிக்காம இருக்கறதுக்கு நாம ஒரு கேம் வெளயாடலாமா?..." ஹைய்யா...நான் ரெடி....என்னா கேமு சொல்லு..... இந்தா, இந்த பேப்பர்ல நான் எனக்குப் புடிச்ச அஞ்சு ஆம்பளைங்க பேர எழுதுறேன். நீங்க உங்களுக்குப் புடிச்ச அஞ்சு பொம்பளைங்க பேர இன்னோரு பேப்பர்ல எழுதுங்க... "சரி...." இந்தாங்க என்னோட லிஸ்டு.... உங்கள்த காட்டுங்க... மனைவி லிஸ்ட்: 1. ரஜினிகாந்த்  2. கமல்ஹாசன்  3. அஜீத்  4. விஜய்  5. சூர்யா     புருசனோட லிஸ்ட்: 1. மல்லிகா (கொழுந்தியாள்) 2. கமலா (பக்கத்து வீட்டுக்காரி) 3. ஷாலினி (பொண்டாட்டியோட பிரெண்டு) 4. லீனா (பையனோட க்ளாஸ் டீச்சர்) 5. லலிதா (பழைய காலேஜ்மேட்) நீதி: பெண்கள்  கனவில் வாழ்கிறார்கள். ஆண்கள் எதார்த்த உலகில் இருக்கிறார்கள்..!😂🤪  முக்கியமான இன்னொரு நீதி: இப்படித்தான் போட்டு வாங்குவாங்க. உஷார்

கல்கி இதழ்கள் மின்னூல்கள் இணையத்தில்

நண்பர்களே! கோரோனாவால் பொழுது போகாமல் தவிக்கும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. கல்கி நிறுவனத்தினர் தங்களது இணையத்தளத்தில் 1943 -2010 வரையில் வெளியான கல்கி இதழ்கள் அனைத்தையும், வெளியான தீபாவளி மலர்கள் போன்ற மலர்கள் அனைத்தையும் இலவசமாக வாசிக்க அனுமதியளித்துள்ளார்கள். பொன்னியில் செல்வன் , சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களையெல்லாம் ஓவியர் மணியம் , ஓவியர் வினு ஆகியோரின் ஓவியங்களுடன் மீண்டும் வாசிக்க முடிவது மகிழ்ச்சியை அளிப்பது.  இது போல் மீ.ப.சோமுவின் 'கடல் கண்ட கனவு', 'வெண்ணிலவுப் பெண்ணரசி', அகிலனின் 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி', 'வெற்றித்திருநகர்' , நா.பார்த்தசாரதியின் 'மணி பல்லவம்', 'பாண்டிமாதேவி' . கி.ராஜகோபாலனின் சரித்திர நாவல், கெளசிகனின் 'பாமினிப்பாவை', கல்கியின் 'பார்த்திபன் கனவு' , ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' போன்ற நாவல்களையெல்லாம் அத்தியாயங்களைத் தொகுத்து மின்னூல்களாக்கி வைத்துள்ளார்கள் .அவற்றையும் இலவசமாக வாசிக்கலாம். மின்னூல்கள்: https://www.kalkionline.com/publication/fpubbook.php கல்கி இதழ்கள் (194

இனி வரப்போகும் பஞ்ச காலங்களில்உயிர் பிழைத்து தொற்று நோயிலிருந்து தப்பி வாழ

இனி வரப்போகும் பஞ்ச காலங்களில் உயிர் பிழைத்து தொற்று  நோயிலிருந்து தப்பி வாழ ; ஒரு பனை ஓலைக் குடிசை...!!!  வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!! வெளியே ஒரு விசுவாசமான நாய். பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்.. ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி... பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள் 🐓🦃🐛🦆 இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு.... சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்⛳⏹️🌴 ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...! அடுத்து ஒரு புளியமரம்...!!! பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்🌲🌿🌳 விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்... மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!! மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும். ⚱️🌽🌾 இவை மட்டுமே போதும்... எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.👑 உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்!

Gen Logo

Image
  Gen Logo

ஜனகனின் வில்லை உடைத்தது யார்?

ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்கு வந்த பிறகு, பள்ளி ஒன்றில் தமிழ் வகுப்பு, கம்பராமாயணம் நடத்திக் கொண்டிருந்த தமிழாசிரியர் மாணவர்களின் கவனிப்புத் திறனைப் பரிசோதிக்க எண்ணி கேள்வி கேட்டார். "மாணவர்களே! என் கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்கள், ஜனகனின் வில்லை உடைத்தது யார்?" மாணவர்கள் முகத்தில் பீதி கிளம்பியது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தனர். ஆசிரியருக்கு கோபம் வந்தது.. முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவனை எழுப்பினார். "நீ பதில் சொல்!" படாரென அவரின் கைகளைப் பிடித்து அழுது கொண்டே சொன்னான் "நான் உடைக்கலை சார், எவன் உடைச்சான்னும் நாங்க பார்க்கலை சார். தயவு செய்து எங்களை சந்தேகப்படாதீங்க சார்" அவனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் கோரஸாக அதையே சொன்னார்கள்.! வெறுத்துப் போன ஆசிரியர் அனைவரின் பெற்றோர்களையும் மறுநாள் அழைத்து வரச் சொன்னார், மறுநாள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் வந்தனர்.. ஆசிரியர் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார், பதில் தவறாகக் கூறிய மாணவனின் தந்தை எழுந்து சொன்னார்; "சார்! என் மகனின் நடத்தை குறித்து வருத்தப்படுநகிறேன். சின்ன வயதிலிருந்த

Madras musings

1. _My elder brother is an irritating fellow._    He is anna-ying. 2. _Where do dentists in Chennai practice?_    EEE-kaatu thaangal. 3. _How did the Arctic bear slap the other one?_    Polar polar nu. 4. _Why is Michelle Obama considered so careless?_    Ava epome Barack ah paathutu irupa. 5. _What do you call it when your elder sister gives you a place to stay?_     Akkamodation. 6. _Where did the Mallu girl go when she became angry?_    Ava Cochinu poita.  7. _Why was the spy staring at the sea?_    Avan Wave paakaraan.  8. _Why were the tourists staring at the hammer instead of sight-seeing?_    Avanga suthi paaka vandhanga. 9. _Your friend poked you. You poked back. You've poked each other 158 times in a row._    Pozhudhu-poke.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?

_*சிந்தனைச் சிதறல் 12-05-2021*_ 🌞🌞🌞🌞🌞🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 _*என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ ஒரு காலைச் சந்தனத்தில்  வைத்தால், மறு காலைச் சேற்றில் வைப்பதே என் வாழ்க்கையின் விதி என்றாகி விட்டது. முன் பக்கம் மயில் ஆடினால், பின் பக்கம் கரடி பாய்ந்து கொண்டிருக்கும். தலைக்கு மேலே, தேவா்கள் பூமாாி பொழிவாா்கள்.  காலுக்கு கீழே, கருநாகங்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும். மழை பெய்யும் போதே வெய்யில் கொளுத்தும். என் பக்கத்தில் மனிதா்களும் உட்காா்ந்து கொண்டிருப்பாா்கள்; பேய்களும் உட்காா்ந்து கொண்டிருக்கும். நான் மயக்கத்திலும், சங்கீதத்திலுமே நிம்மதியைக் கண்டேன். 1961 இல் இருந்து 72 வரை, நிம்மதியற்ற நிலையில்தான் அத்தனை பாடல்களையும் எழுதினேன் என்பதைக் கேட்க நீங்கள் ஆச்சாியப் படுவீா்கள். நிம்மதியற்ற நிலை பொறுக்க முடியாமல் பிறந்த பாட்டுதான் _*"எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கொரு இடம் வேண்டும்!"*_ என்பது. வசனம் எழுதிக் கொண்டிருப்பேன்; விசனம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும். இதை முடித்து அதைக

நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்

*பயப்படாதே மகனே* *நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்* ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.  ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன்  நான் இப்போது வளர்ந்திருக்கிறேன், இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள். ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்” எனறான் அந்த சிறுவன். ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக  “மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை. முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும்,

இரு புதல்வர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்கி, சேலத்துக்கு பெருமை சேர்ந்த தந்தை...!

தன் இரு புதல்வர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்கி, சேலத்துக்கு பெருமை சேர்ந்த தந்தை...! நம் சேலம் மண்ணின் மைந்தர்களான திரு.வெ.திருப்புகழ் I.A.S, மற்றும் திரு .வெ.இறையன்பு I.A.S இருவரின் தந்தை மரியாதைக்குரிய அய்யா திரு.வெங்கடாஜலம் அவர்கள் இன்றும் சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகரில் பழைமைமாறாத பாரம்பரிய வீட்டில் இயற்கைச்சூழலில் எளிமையாக வசித்து வருகிறார்...! அய்யா திரு.வெங்கடாஜலம் அவர்கள் தமிழ்மீது தீவிரப்பற்றும் ,கல்வியின் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்தவர்...! அதனால் தன் வாரிசுகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டி, நன்கு படிக்கவைத்து மிக சிறந்த வாழ்க்கையை கொடுத்துள்ளார்...! அய்யாவின் மூத்தமகள் திருமதி பைங்கிளி அவர்கள் சேலம் சாரதா கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியாக திறம்பட பணியாற்றி ஒய்வு பெற்றவர்...! அடுத்த மகள் திருமதி இன்சுவை அவர்கள் அருமையாக படித்து பத்து பட்டங்களுக்கு மேல் பெற்றவர்..! மூத்த புதல்வர் திரு.வெ.திருப்புகழ்  ஐ.ஏ.எஸ் அவர்கள் டெல்லியில் இந்திய பிரதமர் மோடியின் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்...! மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது ஏற்பட்ட பூகம்பத்தின் போது,அப்போது அங்கு பண

சீதாராமனின் தமிழ் விடு தூது

 

மேட் இன் சைனா

#சைனாகாரர் குடும்பத்தோட சென்னைக்கு  டூர் வந்தாரு. #ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு ஆட்டோ பிடிச்சார். #வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார். உடனே சொன்னார்.. "இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனால பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்.. #கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பார்த்தாரு.. உடனே சொன்னார்.. "இங்க உள்ள ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது.. சைனால ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்.." #வழி நெடுக இப்படி சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல. #இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனாகாரர் மீட்டர்ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகைன்னு கேட்டார். #ஆட்டோடிரைவர் 1000ரூபா ன்னார். #அதிர்ச்சியான சைனாகாரர், 'என்ன விளையாடுறியா.. உங்க ஊர்ல பஸ் மெதுவா போகுது, ட்ரெயின் மெதுவா போகுது.. எல்லாமே மெதுவா தான் போகும்ன்னா, எப்படி மீட்டர் மட்டும் இப்படி வேகமா சுத்தும்'ன்னு கேட்டார். #அதுக்கு டிரைவர் அமைதியா சொன்னார்.. ஏன்னா, மீட்டர் மட்டும் 'மேட் இன் சைனான்னு சொல்லி துட்ட வாங்கிட்டு போயிட்டார். 😎 😎 😎 😎 😎