Posts

Showing posts from April, 2022

அடி

அடி உதவினால் போல அண்ணன் தம்பி உதவாத அக்கால அடிகள் லிஸ்ட்! இன்னிக்கு இருக்கர சின்ன பசங்களுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பதுதான் இங்க மேட்டர். 1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி! 2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி. 3. அடி வாங்காமலேயே அழுதா விழும் அடி. 4. பெரியவங்க உக்காந்திருக்கர இடத்ல நின்னுட்டு இருந்தா அடி 5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உக்கார்ந்திட்டே இருந்தா அடி. 6. பெரியவங்க உக்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.  7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி 8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.  9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா,எங்க சுத்திட்டு வர்ரன்னு ஒரு மொத்து. 10.அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி  11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.  12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி.  13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோ