Posts

Showing posts from August, 2025

ஆகஸ்ட் 13-உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்

Image
 இன்று. உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த, இந்தியாவில் ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13ம் தேதி உடலுறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 2 லட்சம் பேர் விபத்தில் சிக்கி மூளைச்சாவுக்கு ஆளாகி இறக்கிறார்கள். இவர்களது கிட்னி, இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை வீணாக மண்ணுக்குப் போகிறது.  மண்ணுக்கு வீணாகச் செல்லும் உறுப்புகளை வாழக் காத்திருக்கும் மனிதருக்கு வழங்கினால், தானம் பெறுபவரும் வாழ்வார், தானம் கொடுத்தவரும் மற்றொரு உயிரில் வாழ்வார். ஆனால் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படாமல் வீணாகிறது.  மூளைச் சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க உறவினர்கள் முன் வர வேண்டும். ஆனால் 131 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய மக்களில், வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே உடலுறுப்பு தானம் செய்வதாக, மருத்துவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.  மேற்கத்திய நாடுகளில் 70 முதல் 80 சதவீதத்தினர் உடலுறுப்புகளை தானம் செய்யும் நிலையில், இந்தியாவில் அது வெறும் 1 ச...

ஆகஸ்ட் 12 - உலக யானைகள் தினம் - World Elephant Day

Image
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன.  இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.12 ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

சிவனும், விஷ்ணுவும் ஒன்றெனக் காட்சி தந்த அதிசயம்! ஆடி தபசு திருநாள் சிறப்பு!

Image
* *ஆகஸ்ட் 7, ஆடி தபசு* தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் பதினோராம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மகாராஜாவால் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் சங்கரன்கோவில் பகுதியை உக்கிரபாண்டிய மகாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் சைவ பக்தர். அடிக்கடி மதுரைக்குச் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பது அவரது வழக்கம். அவர் படை வீரர்கள் புடைசூழ யானையில் பயணித்து மதுரையை அடைவாராம். மீனாட்சி, சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு அதே வழியில் அவர் திரும்புவாராம். ஒரு சமயம் அவர் மதுரைக்குச் செல்லும்போது இடையில் பெருங்கோட்டூர் என்னும் இடத்தில் அவரது பட்டத்து யானை தனது தந்தத்தால் மண்ணைக் குத்தி கீழே விழுந்தது. இதனால் மன்னர் செய்வது அறியாது திகைத்தார். அப்போது புன்னை வன காவல்காரரான மணிகிரிவன் என்பவர் அவர் முன் தோன்றி, ‘அரசே இங்கே புற்றொன்றுடைய புன்னை வனம் உள்ளது’ என்றார். இதையடுத்து அந்த இடத்தை தோண்டும்போது பாம்புகள் சுற்றிக் கிடக்க, சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. இதனால் வியப்பின் எல்லைக்கே சென்ற மன்னர் அரண்மனைக்கு திரும்பி விட்டா...

Recruitments in HCL, WIPO (YEP) and Saffron Technologies

Image
1. https://freshers.hcltech.com/ 2. https://www.wipo.int/en/web/working-at-wipo/young-experts-program 3. We Are Hiring: CAD & CAE Engineer Interns | Saffron Aeronautics Pvt. Ltd. Saffron Aeronautics Pvt. Ltd., a pioneering company in advanced UAV and aerospace solutions, is looking for passionate CAD & CAE Engineer Interns to join our innovative team. This is an excellent opportunity to gain hands-on experience in the aerospace industry and work on cutting-edge projects. Role & Responsibilities: Assist in 3D modeling and drafting of UAV components and systems using CAD software. Perform structural, thermal, and aerodynamic simulations using CAE tools. Collaborate with the design and R&D team on conceptualization, analysis, and optimization of UAV structures. Support in documentation and testing for ongoing projects. Requirements: Pursuing or completed B.Tech/B.E. in Mechanical, Aerospace, or related engineering fields. Familiarity with SolidWorks, CATIA, ANS...

KNOW e-TAMIL

* 😀😀😀😀😀* *“ஐயா வணக்கம்."* *"வணக்கம். சொல்லுங்க."* *"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"* *"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"* "நேற்றுதான் ஐயா *புலனம் (WhatsApp)* மூலம் அனுப்பினேன். இன்று காலை *பற்றியம் (Messenger)* மூலமும் பகிர்ந்தேன்." "நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது *தொலைவரி (Telegram)* தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். *இயங்கலை (Online)* மூலம் பங்கேற்கலாமா ?"  "சரி ஐயா. *காயலை (skype)* மூலம் பேசுங்கள். நாங்கள் *ஒளிவீச்சி (Projector)* மூலம் பங்கேற்பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்." "மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் *தடங்காட்டி (GPS)* உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன்.   " "பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் *படவரி (Instagram)* மூலமும், *கீச்சகம் (Twitter)* மூலமும் பகிர்ந்தால், நன...