Posts

Showing posts from May, 2022

யாதும் ஊரே யாவரும் கேளிர்

நெற்குப்பை to மகிபாலன்பட்டி  சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று  உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச்  சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;* *தீதும் நன்றும் பிறர்தர வாரா;* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....* *சாதலும் புதுவது அன்றே;...* *வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*  *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...* *ஆதலின் மாட்சியின்* *பெயோரை வியத்தலும் இலமே;* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* – கணியன் பூங்குன்றனார் *"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று வாழ்ந்தால் , இந

தமிழன் என்னும் இந்தியன்

💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 ● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.* ● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.* ● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.* ● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.* ● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் காட்டியது தான்*  ● *இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தான் இருக்கிறது.* ● *மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள்தான் கோலோச்சுகின்றனர்.* ● *சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.* ● *கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.* ● *ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.* ● *பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நடத்தப்படும் மொழியும் தமிழ்தான்.* ● *சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ், இலங்கை நாடுகளின் காசுகளிலும் எழுதப்பட்டிருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் தான்.* ● *ஆறுக்கும்

பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல

மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது... எனில்... படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும் எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...? பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல... கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...? நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...? தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...? புரிதல் வேண்டும்... பண்படுத்துவது என்பது - புண்படுத்துவது அல்ல என்ற புரிதல் மாணவர்களுக்கு மட்டுமல்ல - மற்றவர்களுக்கும் வேண்டும்...! ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்... குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...? ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிற