* *ஆகஸ்ட் 7, ஆடி தபசு* தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் பதினோராம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மகாராஜாவால் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் சங்கரன்கோவில் பகுதியை உக்கிரபாண்டிய மகாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் சைவ பக்தர். அடிக்கடி மதுரைக்குச் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பது அவரது வழக்கம். அவர் படை வீரர்கள் புடைசூழ யானையில் பயணித்து மதுரையை அடைவாராம். மீனாட்சி, சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு அதே வழியில் அவர் திரும்புவாராம். ஒரு சமயம் அவர் மதுரைக்குச் செல்லும்போது இடையில் பெருங்கோட்டூர் என்னும் இடத்தில் அவரது பட்டத்து யானை தனது தந்தத்தால் மண்ணைக் குத்தி கீழே விழுந்தது. இதனால் மன்னர் செய்வது அறியாது திகைத்தார். அப்போது புன்னை வன காவல்காரரான மணிகிரிவன் என்பவர் அவர் முன் தோன்றி, ‘அரசே இங்கே புற்றொன்றுடைய புன்னை வனம் உள்ளது’ என்றார். இதையடுத்து அந்த இடத்தை தோண்டும்போது பாம்புகள் சுற்றிக் கிடக்க, சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. இதனால் வியப்பின் எல்லைக்கே சென்ற மன்னர் அரண்மனைக்கு திரும்பி விட்டா...
Comments
Post a Comment