கல்லூரியை விட்டு வெளியே வந்து, நெடுங்காலத்திற்குப் பிறகு, ஒரு பழைய குழுவினர் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்; மிக நல்ல அளவில், பணம் சம்பாத்தியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஒருவரது வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள். அந்த பேராசிரியர், அவர்களது வேலையைப் பற்றி கேட்கத் தொடங்கினார். மெதுவாக அந்த உரையாடல், அதிகரித்துக் கொண்டு செல்லும் போது மன அழுத்தம், மேலும் வாழ்க்கையில் உள்ள வேலையின் சுமை - இவற்றைப் பற்றியதாகச் சென்றது. இந்த விஷயத்தில், அனைவருமே ஒரே விதமான கருத்தையே கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருமே, பண விஷயத்தில் எந்த விதமான குறைபாடு ஏதும் இல்லாமல், வலுவாக இருந்த போதும், அவர்களது வாழ்க்கை, வழக்கமாக இருக்க வேண்டியது போல, வலிமையாகவோ, வேடிக்கையாகவோ இருக்கவில்லை. அந்த பேராசிரியர் அவர்களை மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் திடீரென்று எழுந்து சென்றார்; சிறிது நேரத்திற்குப் பிறகு, சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்; அவர் கூறினார்,“ எனது அ...