வைகறை வசந்தம்
விஞ்ஞானத்தில் நிலையாற்றல்
(Potential Energy) மற்றும்
இயங்காற்றல் ( Kinetic Energy) என்று இருக்கிறது.
ஆகவே மனோபலம் (நிலையாற்றல் போன்ற)
உள்ளுறை சக்தி, அதை உபயோகப்படுத்தும் போது, அது இயங்காற்றலாக மாறுகிறது.
நாம் என்ன செய்கின்றோம் என்றால் நாம் எந்த அளவுக்கு சுபாவங்களுக்கு
அடி பணிகிறோமோ
அந்த அளவுக்கு மனோபலம் அதிக சக்தியைப் பெறுவதற்குப் பதிலாக சுபாவங்கள் அதிக சக்தியைப் பெறுகின்றன.
ஆகவே, மனோபலத்தின் சக்தி, சுபாவங்களுக்கு எடுத்துக் கொடுக்கப்படுகின்றது.
ஆகவே, சுபாவங்களின் சக்தியை நீக்கினால்தான், நாம் மீண்டும் மனோபலத்தின் சக்தியைப் பெறுவோம்.
அந்த சுபாவங்களை விலக்குவது அல்லது அழிப்பதுதான் நம்முடைய சுத்திகரிப்புப் பயிற்சியாகும்.
அவைகளை நீங்கள் அழிக்கிறீர்கள் - ஒரு
சிலேட்டை (Slate) அழிப்பது போல. மனோபலத்திற்கு அதன் ஆரம்ப சக்தி மீண்டும் வந்து விடுகின்றது.
*
🙏🏻
Comments
Post a Comment